அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும்
கொள்கையில்உறுதியையும்மனவலிமையையும்தந்தருள்வானாக!அல்லாஹ்வின்மகத்தானகிருபையால்மிகப்பெரிய
போராட்டங்களைச் சந்தித்து நாம் பெற்ற பாக்கியமானஉண்மையான ஓர் இறைக்கொள்கை என்னும்
பாக்கியத்தை நம்மில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகபலவிதமான சூழ்ச்சி வலைகள்
நம்மைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. நம்மீது இல்லாத பொய்யானகுற்றச்சாட்டுக்களைச்
சுமத்துகின்றனர். நம்முடைய செயல்பாடுகளை முடக்க வேண்டுமென்பதற்காக
அயராதுமுயற்சிக்கின்றனர். வரலாறு தெரியாத அப்பாவிகள் குறிப்பாக இளைஞர்கள் இவர்களது
பசப்பு வார்த்தையில்மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் நம்மைப்பற்றிக்
கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுஅப்படியே நம்பிவிடுகின்றனர்.
தனி நபர்கள் மீது கொண்ட பற்றின் காரணத்தினால்
அவர்கள் மீது முழுக்கமுழுக்க விசுவாசம்கொண்டுவிடுகின்றனர். அவர்கள் சொல்வதெல்லாம்
ஆதாரத்தின் அடைப்படையில் தானா? என்று
கேட்பதற்குக்கூட தயங்குகின்றனர். இதனால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம்
கண்மூடித்தனமாக விமர்ச்சிக்கதுணிந்துவிட்டனர். இந்த நிலை சமீப காலமாக தமிழக
முஸ்லிம்களைப் பிடித்திருக்கின்ற மிகப்பெரிய நோயாகஉள்ளது. இந்த நோயைப் போக்குவது
மிகப்பெரிய சிரமமாக உள்ளது.
இது நல்லவர்களுக்கும், உண்மையான இறை விசுவாசிகளுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய
சோதனையாகும்.இந்த நேரத்தில்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு பதில் கொடுத்துநம்முடைய பொன்னான காலத்தையும் நேரத்தையும், பாழாக்கிவிடக்கூடாது. நாம் எவ்வளவுதான்
உண்மைகளைஎடுத்து விளக்கினாலும் அதை அவர்கள் ஏற்பதற்கு தயாராக இல்லை, வீண் விதண்டாவாதம் பேசுவதிலேயேதங்கள்
வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அப்படிச் செய்வதை பெருமையாகவும், கருதுகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்
நம்மீதுள்ள கடமை, மக்களுக்கு
குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில்
மக்களைவழிநடத்திக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் யாருக்கு நேர்வழியை
நாடியிருக்கின்றானோ அவர்கள்நாம் சொல்வதைப் புரிந்துக்கொள்வார்கள். உண்மையை
விளங்குவார்கள்.
''(சத்தியத்தை) எடுத்துச் சொல்வதைத் தவிர வேறு
எதுவும் நம்மீது இல்லை'' அல்குர்ஆன்
36:17
என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பணி
செய்து கொண்டே இருக்க வேண்டும். நம்மீதுள்ள பிரச்சாரகடமையைச் சரிவர நிறைவேற்றினோமாஎன்பது
தான் மறுமையில் கேள்வியாக இருக்குமே தவிர உன்னால்எத்தனை பேர்கள் நேர்வழி
பெற்றார்கள் என்று கேட்கப்படமாட்டாது.
உங்கள்நலம்நாடும்
கமாலுத்தீன்மதனி

No comments:
Post a Comment