Monday, April 1, 2013

அல்ஜன்னத் மாதஇதழ் ஏப்ரல்(2013) தலையங்கம்


இனவாதத்தை ஒழிப்போம் மனித நேயத்தை வளர்ப்போம்
நாம் எல்லோரும் மனிதர்கள், ஒரே தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற மனித சகோதரத்துவம் மனிதர்களுக்கிடையே நாளுக்கு நாள் மங்கி வருகின்றது. ஒருதாய் மக்களாக வாழ வேண்டியவர்கள் சிதறுண்டுசீரழிந்து, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.மனிதர்களுக்கிடையில் பாச உணர்வு என்ற நற்பண்புகுறைந்து வெறுப்பும், குரோதமும் தலை தூக்கிவிட்டது.பொது நலம் மங்கி, சுய நலம் ஓங்கிவிட்டது.ஒவ்வொருவரும் தன் இனம், தன் நிலம், தன் மொழி,தன் உரிமை என்று பேசத் துவங்கிவிட்டனர். இனத்திற்காகக் குரல் கொடுப்பவர்களும் போராட்டங்கள்நடத்துபவர்களும் மலிந்து விட்டார்களே தவிரமனிதர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் குறைந்துவிட்டனர்.
இலங்கையில் தமிழ் பேசக்கூடிய மக்கள் அந்நாட்டுஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்என்பதற்காக அந்நாட்டுத் தலைவனைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தண்டனைவழங்கப்பட வேண்டும். இதை சர்வதேச பார்வைக்குக்கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து இடைவிடாது சில அரசியல்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. தேசியப்பார்வையில் இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகபிரச்சாரத்தை முடுக்கிவிடுகின்றனர். தற்போது கல்லூரிமாணவர்களையும் களத்தில் குதிக்கச் செய்துள்ளனர்.இவர்களுடைய போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.இவர்கள் எல்லோருடைய கோரிக்கை இலங்கையில்தமிழ்பேசுகின்ற இனத்தவர் திட்டமிடப்பட்டுகொல்லப்பட்டுள்ளார்கள். எனவே இது இனப்படுகொலையாகும் என்று கூறி அதற்கு பரிகாரம் தேடிஅலைகின்றனர். இலங்கையில் அப்பாவி மக்கள்இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது மிகவும்கண்டிக்கத்தக்கது. மனித நேயம் உள்ளவர்கள் அதைஆதரிக்கமாட்டார்கள். அதே நேரத்தில் தான்பேசுகின்ற ஒரு மொழியை அவர்களும் பேசுகிறார்கள்என்ற ஒரே காரணத்திற்காக போராடுகிறார்கள்என்றால் அவர்கள் மனித இனத்திற்காகப் போராடவில்லை, அப்படியானால் அவர்களிடம் மனிதம்மரித்துப்போய் விட்டது என்பது தான் பொருள்.இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மனிதசகோதரர்கள் என்ற பார்வையில் அவர்களுக்காககுரல் கொடுக்கப்படுமானால் அது எல்லோராலும்வரவேற்கப்படக்கூடியதாகும்.
மனிதர்கள் யாராக இருந்தாலும் எந்த மொழியைப்பேசக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள்எல்லோரும் மனிதர்களே, அவர்கள் என் சகோதரர்கள்.அவர்கள் பாதிக்கப்படும் போது நான் அவர்களுக்காககுரல் கொடுப்பேன் என்ற பண்பு ஒவ்வொருவரிடமும்வருகின்ற போதுதான் மனித நேயம் மலரும்.அடுத்த நாட்டு விவகாரத்தில் தலையிட்டு அந்தநாட்டில் உள்ள ஒரு சாரார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வீதிக்கு வந்தவர்களின் பார்வையில் சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிவாசலிலே அமைதியான முறையில் ஒருசாரார் வழிபாடுநடத்திக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள்நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைச்சுட்டுத்தள்ளினார்களே அப்போது அந்த நாட்டில்உள்ளவர்களோ, இந்த நாட்டில் உள்ளவர்களோபோராடினார்களா? அது இனப்படுகொலையாகஅவர்களுக்குத் தெரியவில்லையா?உள்நாட்டில் குஜராத்தில் ஒரு இனத்தவர் பல்லாயிரக்கணக்கில் திட்டமிட்டு அங்குள்ள ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்களே அதற்காக இவர்கள் ஏன்போராட்டங்களில் இறங்கவில்லை?இவர்களுடைய பார்வையில் அதுஇனப்படுகொலை இல்லையா?அல்லது பாதிக்கப்பட்ட அந்த மக்கள்இவர்களிடத்தில் மனிதர்களாகத்தெரியவில்லையா?
பர்மாவில் மியான்மரில் ஒரு இனத்தவர் பல்லாயிரக்கணக்கில் காட்டுமிராண்டித்தனமாகஅந்நாட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டு வருகின்றனரே? உலகமே கண்டு கொள்ளாமல் இருந்துவருகிறதே? அது இவர்களுடைய பார்வையில் இனப்படுகொலையாகத் தெரியவில்லையா?பாலஸ்தீனத்தில் சொந்த நாட்டிலேயே அங்குள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேலியஅரசால் கொன்று குவிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றனரே அதுஇனப்படுகொலை இல்லையா?ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தினர் லட்சக்கணக்கான மக்களைக்கொன்று குவித்தார்களே அதற்காகஇவர்கள் போராடினார்களா? அமெரிக்காவை எதிர்த்துப் போராடினார்களா? அங்கு கொல்லப்பட்டவர்களெல்லாம் மனித உயிர்களில்லையா?மனிதர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் மொழி, ஜாதி, இவற்றிக்கு அப்பாற்பட்டு எல்லோரும் மனிதசகோதரர்கள் அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்மனிதர்களிடத்தில் தலை தூக்காதவரை மனித நேயம் மலரப்போவதில்லை, பூமியில் சாந்தியையும்சமாதானத்தையும் பார்க்க முடியாது.படைத்த இறைவன் கூறுகிறான்:
'மனிதர்களே! நிச்சயமாக நாம்உங்கள் அனைவரையும் ஒரேஆண் ஒரே பெண்ணிலிருந்தேபடைத்தோம், பின்னர் நீங்கள்ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைபல கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.உங்களில் எவர் அல்லாஹ்வுக்குஅஞ்சி வாழ்கிறாரோ அவர்தான்அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமிக்கவர். நிச்சயமாக அல்லாஹ்நன்கறிபவன். யாவற்றையும்சூழ்ந்து அறிபவன்.அல்குர்ஆன் 49:13

No comments:

Post a Comment