Monday, April 1, 2013

கோடைகால இஸ்லாமியப்பயிற்சி முகாம்



ஏக இறைவனின் திருப்பெயரால்..

கோடைகால இஸ்லாமியப்பயிற்சி முகாம்
இடம்: JAQH மர்க்கஸ் ,மஸ்ஜிது ஸ்ஸலாமத், ஹவ்வாநகர்,இளங்கடை,நாகர்கோவில்,குமரிமாவட்டம். நாள்:18-04-2013 முதல் 18-05-2013 வரை (ஒருமாதகாலம்) இன்ஷாஅல்லாஹ்..

வகுப்பு நடைபெறும் நேரம்:-   தினமும் மாலை 2 மணிமுதல் 6 மணி வரை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் அனைவருக்கும் வரும் கோடைவிடுமுறையில் இஸ்லாமிய மார்க்க கல்வி வழங்க வழக்கம்போல் இவ்வாண்டும் ஜம்யிய்யத்துஅஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் JAQH (நாகர்கோவில் நகரம்) ஏற்பாடு செய்துள்ளது. இறையச்சம் மற்றும் ஒழுக்கப்பயிற்சியுடன் கூடிய இஸ்லாமியக் கல்வியை புகட்டுவதன்மூலம் நல்லொழுக்கமுள்ள சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயனடையயுமாறு கேட்டுக்கொள்கிறோம். முறையான பாடதிட்டத்துடன் தேற்சி பெற்ற மார்க்க அறிஞர்களைக் கொண்டு ஒருமாதகாலம் நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில் சேரவிருப்பமுள்ளவர்கள் 16-04-2013க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு 9442076269
 

No comments:

Post a Comment