Saturday, June 30, 2012

அல்ஜன்னத் மாதஇதழ்(2012 ஜூலை)தலையங்கம்

பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுகின்ற ஆசிரி யைகள் ஒரு மகத்தான பொறுப்பைச் சுமந்துள்ளனர். கல்வி என்கின்ற உயர்ந்த செல்வத்தைப் பெற்றுள்ளார்கள். அதை மாணவச் செல்வங்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற மகத்தான பணியை ஏற்றிருக்கின்றார்கள். இது வெறும் காசுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறுப்பல்ல, மாணவ சமுதாயத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பு. ஆசிரியைகளான உங்கள் ஆடல், அசைவு, பேச்சு, எழுத்து, நடை, உடை, பாவனை அனைத்துமே மாணவர் களால் கவனிக்கப்படுகிறது. அது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது. இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று ஆசிரியைகளின் ஆடை,
 இன்று பள்ளி கல்லூரி ஆசிரியைகளின் ஆடை குறைப்புஅதிகரித்து வருகிறது. அதன் காரணத்தினால் மோச மான விளைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகள், பாலியல் வன்முறைகள், தற்கொலைகள், ஈவ்டீசிங், கிண்டல் கேலிகள் போன்றவை மாணவர்களிடத்தில் பெருகி வருகின்றன. குறிப்பாக மாணவ, மாணவியர் கலந்து பயிலும் வகுப்பறைகள், அல்லது மாணவர்கள் மட்டும் உள்ள வகுப்பறையில் பெண் ஆசிரியை வகுப்பு நடத்துவது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆசிரியைகளில் அதிகமானவர்கள் தங்கள் நெஞ்சுப்பகுதி, முதுகின் பெரும் பகுதி, இடுப்புப் பகுதிகள், அடிவயிற்று பகுதி, இவற்றையெல்லாம் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டும், மெல்லிய ஆடையைஅணிந்து கொண்டும், அங்க அவயங்களின் கனபரிமானங்கள் தெரியும் விதத்திலும், சிலர் கொண்டையில்மலர் சூடியும் வகுப்பறையில் மாணவர்கள் முன்நின்றுபாடம் நடத்துகின்ற போது, மாணவர்களின் கவனம்ஆடை குறைப்புப் பகுதியில் தான் இருக்கும். கரும்பலகையில் பாடங்களை எழுதுகின்ற நேரத்தில்ஆசிரியைகளின் முதுகுப்புறத்தின் திறந்த பகுதிகளைப்பார்த்து பின்னால் இருந்து கொண்டு விமர்சிக்கின்றமாணவர்கள் ஏராளம், அதை செல்போனில் படம்பிடித்து, அழகு பார்க்கின்ற மாணவர்கள் உணர்ச்சிகளால் உந்தப்படுகின்ற இந்த காலத்தில் அவர்கள்விரைவாக வழி தவறிச்செல்வதற்கு ஆசிரியைகளின்ஆடை குறைப்பு முக்கிய காரணமாக இருக்கிறதுஎன்பது விவாதத்திற்கு இடமின்றி உண்மையாகும்.ஆங்காங்கே நடந்து வருகின்ற சம்பவங்கள் அதை
உண்மைப்படுத்துகின்றன.ஆசிரியைகள் தங்கள் மேனியை முழுமையாகமறைத்துக் கொண்டு, கண்ணியமான தோற்றத்துடன்வகுப்பறைக்கு வந்து பார்க்கட்டும், மாணவர்களிடத்தில்எப்படிப்பட்ட மகத்தான நல்ல மாற்றம் ஏற்படுகிறதுஎன்பதை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள்,மாணவர்கள் எவ்வாறு மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதையும் உணர்வார்கள்.ஆசிரியைகள் மீது மாணவர்களுக்கு தனிப்பட்டபாசம் ஏற்படுவதைக் காண்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஆசிரியைகள் பாடம் நடத்தும் போது, மாணவர்களுடைய கவனம் வேறு திசைகளுக்குச் சிதறாமல்முழுமையாகப் பாடத்தைக் கவனிக்கின்ற நிலையும்ஏற்படும், அதன் மூலம் பரீட்சையில் அவர்கள் அதிகமதிப்பெண்கள் பெற்று ஆசிரியைகளுடைய நற்பெயரையும் பள்ளியின்நற்பெயரையும் காப்பாற்றுகின்றநிலை உருவாகும்.இவை எல்லாவற்றிற்குமே முக்கிய காரணமாகஇருப்பது ஆசிரியைகள் அணிந்துவருகின்ற ஆடைதான். ஆசிரியைகள் தங்கள் மேனியை முழுமையாகமறைத்துக் கொண்டு பணியாற்றுகின்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி, ஒழுக்க தரத்தையும்,அரைகுறை ஆடை அணிந்துகொண்டு வகுப்பறைக்கு வரும்ஆசிரியைகள் பயிற்றுவிக்கும்பள்ளிக்கூட மாணவர்களின் கல்விஒழுக்கத் தரத்தையும் ஒப்பிட்டுப்பார்ப் போமானால் இந்த உண்மைபுரிய வரும்.இது விஷயத்தில் பள்ளி நிர்வாகமும் அதிக கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்களில்தான் பெண்கள் ஆடைகுறைப்பு கலாச்சாரம் அதிகமாகபெருகி வருவதைப் பார்க்கின்றோம்.எனவே, கல்வி அதிகாரிகள் மிகுந்தஅக்கரை செலுத்தி எதிர்கால தலைமுறையைக் காப்பது அவசியமாகும்.



No comments:

Post a Comment