அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
உண்மையான இறைநம்பிக்கையாளனுக்கு சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் என்பது
அல்லாஹ்வின் நியதி. அதை உறுதியாக நம்பக்கூடியவன் உண்மை விசுவாசி, இப்படி சோதிப்பதன் மூலம்,
எந்த அளவிற்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்பதைச் சோதிப்பதற்காகவே வல்ல அல்லாஹ்
இந்த ஏற்பாட்டைச் செய்கின்றான். இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிரிகளை ஏற்படுத்தி சோதிப்பான். அவர்கள்
மூலமாக அச்சுறுத்தல்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியது வரும். இப்படிப்பட்டவர்கள் ஒரே
கொள்கையை பிரச்சாரம் செய்யக்கூடியவர்களிடையிலும் உருவாவார்கள்.
மனித குல எதிரி சாத்தான்.
அவர்களிடையே விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்துவான். எந்தவிதமான அடிப்படையும்
இல்லாமல் அவர்களுக்கிடையில் மனக்கசப்புகளை ஏற்படுத்துவான். அதன் மூலம் ஒருவருக்கொருவர்
அழித்துக் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள். இதைத்தான் இன்று நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய அமைப்பும் இதுமாதிரியான சோதனைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. தங்களை
மட்டுமே உண்மையான கொள்கைவாதிகள் என்றும், நாங்கள் மட்டுமே சொர்க்கம் செல்வோம் என்றும்
மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சிலர் எந்தவிதமான அடிப்படை முகாந்தரமுமின்றி நம்மைத் தவறான
முறையில் விமர்ச்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் உண்மையான ஏகத்துவக் கொள்கையையும்
உண்மையான ஏகத்துவ கொள்கைவாதிகளையும், அழித்துவிடலாமென கனவு காண்கின்றனர். ஆனால்
அழிந்து கொண்டிருப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.
எனவே, இப்படிப்பட்டவர்களை அவர்களுடைய போக்கிலேயே அல்லாஹ் விட்டுவைத்திருக்கின்றான்.
நாமும் அவர்களை விட்டுவிடுவோம். கடைசியில் அல்லாஹ்வுடைய பிடி மிகவும் இறுக்கமாக இருக்கும்,
அப்போது அவர்கள் தங்களுடைய தவறை உணர்வார்கள். நாம் நமது இலட்சியப்பாதையில் உறுதியோடு
செயல்படுவோம். எவ்வளவு எதிர்ப்பும் எவ்வளவு விமர்சனங்களும் வந்தாலும் அத்தனைக்கும் நாம் பொறுமை
காத்து, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்து செயல்படுவதற்குரிய பாக்கியத்தை நமக்கு அல்லாஹ்
வழங்க அவனிடமே துஆ வேண்டுவோம்.
''இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதியாக நாம்
ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை மற்ற சிலரிடம்
இரகசியமாக அறிவிக்கின்றார்கள்.
அல்குர்ஆன் 6:112

உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன்மதனி
No comments:
Post a Comment