மனித சமுதாயம் நேர்வழியில் வாழ்ந்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படைத்த அல்லாஹ்வால் வழங்கப்பட்டவாழ்க்கை நெறிதான் இஸ்லாம். மனிதர்களுக்குத்தேவையான எல்லாவிதமான சட்ட திட்டங்களும்,அதில் உள்ளன. படைத்தவனின் இறுதித் தூதர்முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவேதமாகிய திருகுர்ஆனில் 1400 ஆண்டுகளுக்குமுன்னரே இந்த உண்மையை வல்ல அல்லாஹ்தெளிவுபடுத்திவிட்டான். மனிதன் மறுமையில் வெற்றிபெற்று சொர்க்கம் செல்ல தேவையான எல்லாவிஷயங்களையும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விளக்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். முழுமைபெற்று விட்டஇஸ்லாமிய சட்டங்களில் யாரும் தனது சுய விருப்பப்படி ஒன்றைக் கூட்டவோ, ஒன்றைக் குறைக்கவோமுடியாது. அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.அல்லாஹ் கூறுகிறான்:''இன்றைய தினத்தில் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரண மாக்கி விட்டேன். மேலும் உங்கள்மீது எனது அருட் கொடையை பூர்த்தியாக்கிவிட்டேன். மேலும் உங்களுக்காக இஸ்லாமைஉங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டேன்.அல்குர்ஆன் 5:3திருகுர்ஆன் வசனங்கள் அருளப்பட்டு முடிந்த தோடுமார்க்கச் சட்டங்களும் முடிவு பெற்று விட்டன.எனவே குர்ஆனில் இல்லாத முஹம்மது நபிசொல்லாத எந்த ஒன்றையும் மார்க்கம் என சொல்லுகின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது. காரணம், படைத்தவன் ஒன்றை கடமையாக்குவதாக இருந்தாலும்ஒன்றை தடை செய் வதாக இருந்தாலும் தனது தூதர்மூலம்தான் அதை நிறைவேற்றுவான்.முஹம்மது நபியோடு தூதுத்துவம் முடிந்து விட்டதாகவும், தனது சட்டதிட்டங்களை முழுமைப்படுத்திவிட்டதாகவும் அல்லாஹ் அறிவித்துவிட்டான்.இதற்குப் பின்னர் யாராவது வந்து எனக்கும் இறைச்செய்தி வருகிறது, நானும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிதான், நானும் சட்டங்களை உருவாக்குவேன்என்று கூறினால் அவன் பச்சை பொய் சொல்கிறான்என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்டு சமூகத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் மீது பொய் யைக்கற்பனை செய்பவனைவிட அல்லது வஹியின்மூலம் அவனுக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமருக்க''எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது'' என்றுகூறுபவனைவிட அல்லது ''அல்லாஹ் இறக்கிவைத்த இவ்வேதத்தைப் போல் நானும் இறக்கிவைப்பேன் என்று கூறுபவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? இப்படிப்பட்ட அநியாயக்காரர்கள்மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால் வானவர்கள் தம் கைகளைவிரித்தவர்களாக (இவர்களிடம்) உங்கள் உயிர்களைவெளியேற்றுங்கள், உண்மையில்லாததைஅல்லாஹ்வின் (பொய்யாக) மீது கூறிக் கொண்டிருந்ததின் காரணமாக இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள். இன்னும் அவனுடைய வசனங்களைநம்பாது பெரு மையடித்துக் கொண்டிருந்தீர்கள்என்று கூறுவதை நீர்காண்பீர். அல்குர்ஆன் 6:93இந்த வசனம் மிகவும் தெளிவாகக் கூறிவிட்டதுஇஸ்லாம் முழுமை பெற்றுவிட்டது, முஹம்மது நபியோடு நபித்துவம் முடிந்து விட்டது. அவர்களுக்குப்பின்னால் யாரெல்லாம் தன்னை இறைத்தூதர் என்றும்தனக்கும் இறைவனிடமிருந்து செய்தி வந்தது என்றும்கூறுகிறார்களோ அவர்கள் எல்லோருமே அநியாயக்காரர்கள், மரிக்கின்றபோது கேவலமான நிலையில்மரிப்பார்கள் என்று விளக்கிவிட்டது.கடந்த கால வரலாற்றை நாம் பார்க்கின்ற போதுமுஹம்மது நபிக்குப்பின் யாரெல்லாம் தங்களை நபியென கூறி வாதாடினார்களோ அவர்கள் எல்லோருமேமரணத்தின்போது இழிவு படுத்தப்பட்டவர்களாகவேமரணமடைந்துள்ளனர். அல்லாஹ்வோடும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தோடும் விளையாடக்கூடியவர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் தங்களை நபியெனக்கூறினாலும் கூறாவிட்டாலும் தன் மனோ இச்சையின்அடிப்படையில் மார்க்கத்தின் பெயரால் சட்டதிட்டங்களைக் கூறக்கூடியவர்கள் என்பதை உணர்ந்துஇப்படிப்பட்டவர்கள் விஷயத்தில் சமுதாயம் மிகவும்விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.

No comments:
Post a Comment