.(அல்ஜன்னத் மாதஇதழ் ஜூன் 2012)
அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நல்லருள்புரிவானாக!இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி ஒரு மனிதனுக்கு அவனுடைய உயிர், அவனுடைய சொத்துசுகம் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய பாக்கியமாகும். காரணம் இந்த வாழ்க்கை நெறி மட்டுமேபடைத்த நாயனிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம், அதன்படி வாழ்ந்தால் மட்டுமேமறுமையில் வெற்றி பெற்று பேரின்ப வாழ்க்கையை அடைய முடியும்.இப்படிப்பட்ட பாக்கியத்தை பெறுவதற்கான வழிமுறையை முஸ்லிம்கள் மிகவும் எளிதானமுறையில் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக இக்காலத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதற்காக கடந்தகாலங்களில் வாழ்ந்தவர்கள் சந்தித்த தியாகங்களில் எதையும் இவர்கள் சந்திக்கவில்லை. தாங்களும்இந்த மார்க்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை. தங்கள் சந்ததிகளையும் இஸ்லாமிய கல்வியாளர்களாகவும், இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி வாழுகின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ள சகோதரர்களே!சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பெற்ற பிள்ளைகள் எந்த அளவிற்குஇஸ்லாமோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்? என்று திரும்பிப் பாருங்கள்.அல்லாஹ்வுடைய வேதமாகிய பரிசுத்த குர்ஆனை எந்த அளவிற்கு அவர்கள் கற்றிருக்கிறார்கள்என்று கேட்டுப்பாருங்கள். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை குர்ஆன் கற்றுக் கொடுக்கும் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இது ஏதோ கண்துடைப்பிற்காக அனுப்பி வைக்கிறார்களேதவிர, அவர்கள் குர்ஆனை நன்கு கற்றுத்தேறிய சிறந்த கல்விமான்களாக மாறவேண்டும் என்றஎண்ணத்தில் அனுப்பி வைப்பதில்லை. சிலர் தங்களுடைய பிள்ளைகள் மத்ரஸாக்களுக்குச் சென்றுஅரபி எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக் கொள்வார்களானால் அதை பெரிய சாதனையாக கருதுகின்றனர்.இந்த நிலைமாறி எதிர்கால தலைமுறை சிறந்த கல்வி ஞானமிக்க மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டும், தவறுவார்களானால் அது அவர்களுக்குஇம்மையிலும் மறுமையிலும் மிகப்பெரிய கைசேதத்தை ஏற்படுத்தும்.
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன்மதனி

No comments:
Post a Comment