சென்னை
6.05.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல்
இரவு 8:00 மணி வரை சென்னை மண்டலம்
சார்பாக மண்ணடி, மேமன் ஜமாத் கானாவில் ஒரு நாள்
இஸ்லாமிய சமூக சீர்திருத்த மாநாடு சிறப்பாக
நடைபெற்றது. இம்மாநாட்டி JAQH செயலாளர் ஜாஹிர்
ஹுஸைன் தலைமை தாங்கினார். மௌலவி அப்துல்
காதிர் மதனி, மௌலவி கமாலுத்தீன் மதனி, மௌலவி
முபாரக் மதனி, சகோதரர் கோவை அய்யூப், மௌலவி
ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, மௌலவி இக்பால்
ஃபிர்தவ்ஸி, மௌலவி மாதர்ஷா ஃபிர்தவ்ஸி, தர்வேஸ்
ஹஸனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில்
மக்கள் திரளாக கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.
புதுப்பேட்டை
01.05.2012 முதல் 10.05.2012 வரை புதுப்பேட்டை மஸ்ஜி
துஸ் ஸலாம் JAQH மர்கஸில் பெண்களுக்கான இஸ்லா
மிய கோடைக்கால வகுப்புகள் நடைப்பெற்றது. 11.05.2012
அன்று அஸர் தொழுகைக்குப் பின் கோடைகால
வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தாம்பரம்
01.05.2012 முதல் 15.05.2012 வரை JAQH தாம்பரம்
கிளைசார்பாக கோடைகால இஸ்லாமிய வகுப்புகள்
நடத்தப்பட்டது. இதில் 180 மாணவ, மாணவிகள் கலந்து
கொண்டு பயனடைந்தனர். இதன் நிறைவு நிகழ்ச்சி
16.05.2012 அன்று நடைபெற்றது. இதில் அப்துர்
ரஹ்மான் மன்பஈ சிறப்புரையாற்றினார். வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேர்ணாம்பட்டு
25.04.2012 முதல் 6.05.2012 வரை உருது பேசும் மாணவி
களுக்காக கோடைக்ôல இஸ்லாமிய வகுப்புகள் நடை
பெற்றது.
மேலும் 07.05.2012 முதல் 19.05.2012 வரை JAQH எழும்பூர்
(புதுப் பேட்டை) கிளை மற்றும் குடியாத்தம் (பேர்ணாம்
பட்டு) ஆகிய கிளைகள் இணைந்து மாணவர்களுக்கு
கான கோடைகால இஸ்லாமிய வகுப்புகள் பேர்ணாம்
பட்டு குல்லியத்து பனாதில் முஸ்லிமீனில் நடத்தப்பட்
டது. இதில் சென்னை, ராணிப்பேட்டை, சேலம்,
பேர்ணாம்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து மாணவர்கள்
இரண்டு வாரம் தங்கி பயிற்சி பெற்றனர். இதன்
நிறைவுநாள் நிகழ்ச்சி 20.05.2012 அன்று நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும்
பரிசுகள் வழங்கப்பட்டது.
வேளாச்சேரி
18.05.2012 அன்று கிண்டி மினி மார்க்கெட்டில் கோவை
அப்துல் காதர் அவர்கள் ஏகத்துவ உரை நிகழ்தி
னார்கள், வேளாச்சேரி JAQH கிளைத் தலைவர்
அப்துல் கையூம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
20.05.2012 அன்று வேளச்சேரி JAQH மர்கஸில் தொடர்
தர்பியா வகுப்பு மாலை 6:30 முதல் 8:30 மணி வரை மவ்
லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் நடத்தினார்கள்.
25.05.2012 அன்று டாக்டர் அம்பேத்கார் நகர் 14வது
தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
மவ்லவி தர்வேஸ் ஹஸனி உரையாற்றினார். இதில்
மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம், சின்னக் கடை, காயிதேமில்லத்
திடல்
மறுமை வெற்றி யாருக்கு? எனும் தலைப்பில்
ஜம்யிய்யது அஹ்ல்
குர்ஆன் வல் ஹதீஸ்
மஸ்ஜிதுல் பிலால் சார்பாக மாபெரும் இஸ்லாமிய
பொதுக்கூட்டம் 28.04.2012 சனி அன்று மாலை 6லி00
மணிமுதல் நடைபெற்றது. அதில் மஸ்ஜிதுல் பிலால்
( மர்கஸ் இமாம் சிராஜ் மீரான் ஃபிர்தௌசி)
தலைமை தாங்கினார்.
மறுமை வெற்றி யாருக்கு? என்ற தலைப்பில் ஷேக்
முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களும், மார்க்க
வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்
பில் மௌலவி இக்பால் ஃபிர்தௌசி அவர்களும் சிறப்
புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக சகோதரர் .முஹம்மது
அல் வாஜித் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் மதுரை, பரமக்குடி, எமனேஸ்வரம், இராமநாத
புரம், கீழக்கரை, மண்டபம், பாம்பன், இராமேஸ்வரம்
போன்ற இடங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்
பட்ட ஆண்களும்.பெண்களும் கலந்து கொண்டு
பயனடைந்தார்கள்.
நாகர்கோவில்
அல் ஜாமிஅத்துல் பிர்தௌசிய்யா அரபிக்
கல்லூரியில் +2 மாணவர்களுக்கான கோடை
இஸ்லாமிய பயிற்சி வகுப்பு 06.04.2012 முதல் 19.04.2012
வரை 2 வாரம் நடை பெற்றது. பயிற்சி வகுப்பில்
உள்ளூர் மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர் .
அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய முக்கிய அடிப்படைப்
பாடங்கள் நடத்தி நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகளும்
சான்றுகளும் வழங்கப்பட்டன.
மைசூர்
மைசூரில் 14.04.2012 அன்று ஒரு நாள் இஸ்லாமிய
மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தர்.
இம்மாநாடு மைசூர் JAQH கிளை சார்பாக ஏற்பாடு
செய்யப்பட்டது.
பரமக்குடி எமனேஸ்வரம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (எமனேஸ்வரம்)
JAQH கிளை கடந்த மார்ச்மாதம் துவக்கப்பட்டது.
கிளை துவக்கப்பட்ட பின் முதல் பொதுக்கூட்டம்
கடந்த 12.05.2012 சனிக்கிழமை இரவு நடத்தப்பட்டது.
இதில் கலந்தர் அபூபக்கர் ''திருக்குர்ஆன் கூறும்
ஒற்றுமை'' எனும் தலைப்பிலும் ஆμக் ஃபிர்தவ்ஸி
''இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்'' எனும்
தலைப்பிலும், சகோ. கோவை அய்யூப் அவர்கள்
''நபிகள் நாயகத்தின் இறுதி உபதேசம்'' எனும்
தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு
பாம்பன் ஹபீபுல்லாஹ் தலைமை தாங்கினார். கிளைத்
துணைச் செயலாளர் ஆஸாத் நன்றி உரையாற்றினார்.
இதில் மக்கள் திரளாக கலந்துக்கொண்டு பயனடைந்
தனர். குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் அதிக
அளவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அனைத்து தரப்பு மக்களும் இயக்க, ஜமாஅத்
வேறுபாடின்றி ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
திட்டச்சேரி
04.05.2012 அன்று முதல் 13.05.2012 வரை 10 நாட்கள்
கோடைக்கால இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி முகாம்
திட்டச்சேரி கிளை சார்பாக ஓஆணஐ மர்கஸில் 8
ஆசிரியர்களைக் கொண்டு நடைபெற்றது. இதில்
80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
இப்பயிற்சி பெண்களுக்கு தனியாக உஸ்மானியா
தெருவில் நடைபெற்றது. ஷர்மிளா சித்திகா நூருண்
நிஷா ஆகியோர் தர்பியா வகுப்பு நடத்தினர்.
இறுதியில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி
செயலாளர் அப்துல் ஹாதி, பொருளாளர் முஜிபுர்
ரஹ்மான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
12.05.2012 அன்று மஃரிப் தொழுக்கைக்குப்பின் பெண்
களுக்கான பயான் திட்டச்சேரியில் நடைபெற்றது.
இதில் இமாம் மில்லத் ஃபிர்தவ்ஸி இன்றைய பெண்
களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் முடிவில் ஜனாஸாவின் சட்டங்கள் என்ற
இலவச புத்தகம் வினியோகிக்கப் பட்டது. சுற்றுவட்டாரங்
களிலிருந்து திரண்டு வந்து பெண்கள் பயனடைந்தனர்.
தென்காசி
தென்காசியில் 14.05.2012 அன்று மார்க்க அடிப்படை
விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்JAQH
தென்காசி கிளைத் தலைவர் அப்துர் ரஹிம் தலைமை
தாங்கினார். மவ்லவி ந.கமாலுத்தீன் மதனி, மவ்லவி
செய்யது அலி பைஸி, மவ்லவி ரஹ்மத்துல்லாஹ்
ஃபிர்தவ்ஸி ஆகி யோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்
கொண்டு பயனடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 06.05.2012 அன்று
காலை 6:30 மணி அளவில் தர்பியா வகுப்பு
நடைபெற்றது. இதில் மவ்லவி முஹம்மது சபீர்
ஃபிர்தவ்ஸி தர்பியா வகுப்பு நடத்தினார்.
13.05.2012 ஞாயிறுக்கிழமை மாலை 4:30 மணிக்கு
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி
யில் சகோதரி கே.ஸல்ஸபில் அவர்கள் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் பெண்கள்
அதிக அளவில் கலந்துக் கொண்டு பயனடைந்தர்கள்.
No comments:
Post a Comment