Saturday, February 25, 2012

சன் நியூஸ், தினத்தந்தி, தினமலரை வன்மையாக கண்டிக்கிறோம் !

தமுமுக மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை என்கிற (02—2-2012 ) சன் நியூஸ், தினத்தந்தி ,தினமலர் செய்தியில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த நபர்கள் ஜாக் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனும் விஷமமான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. நாகூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாகூர் JAQH அமைப்பில் உறுப்பினராக எந்த காலத்திலும் இருந்ததில்லை. அவதூறாக சன் நியூஸிலும், தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகளிலும் செய்திகள் தவறாக வந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
JAQH என்ற பெயரில் அறியப்படும் ஜம்மியத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் என்ற எங்கள் அமைப்பு அமைதியான முறையில் சட்டத்திற்குட்பட்டு இஸ்லாமிய பிரச்சாரம் செய்யக்கூடிய அமைப்பு. தமிழகமெங்கும் பள்ளிவாசல்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், அனாதை இல்லங்கள் நடத்திக்கொண்டு அமைதியான முறையில் எந்தவிதமான அரசியல் ஆதாயம் தேடும் பணிகளையும் இந்த அமைப்பு மேற்கொள்வதில்லை. இந்நிலையில்  JAQH அமைப்பை களங்கப் படுத்த, வேண்டுமென்றே குற்றம் சாட்டப் பட்டவர்கள் JAQH அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ற செய்தியை வெளியிட்ட சன் நியூஸ், தினத்தந்தி, தினமலரை வன்மையாக கண்டிக்கிறோம்.
இது போல முறையாக விசாரிக்காமல் செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மமல்ல என்று சன் நியூஸ், தினத்தந்தி ,தினமலரை நினைவு படுத்துகிறோம். அவதூறு எழுதிய இத்தகைய பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நமதுஅமைப்பின் மாநில தலைமையின் சார்பில் இன்று காலை சென்னை காவல்துறை ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை சமர்பித்திருக்கிறோம்.சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கும் அனுப்பி மறுப்பு வெளியிட வலியுறுத்தி உள்ளோம். அவர்கள் மறுப்பு வெளியிடாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளில் நாம் இறங்குவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment