அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருடைய நற்செயல்களையும் ஏற்று அதற்குரிய நற்கூலியை முழுமையாக வழங்குவானாக!
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்செயலும் வல்ல அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்தே அமைய வேண்டும், அவன் ஒருவனிடம் மட்டுமே அதற்கான நற்கூலியை நாம் எதிர்பார்க்க வேண்டும். மனிதர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற வேண்டுமென்பதற்காகவோ அவர்களைத் திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகவோ நாம் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இந்த நோக்கங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள் எல்லாமே பயனற்றதாக நன்மையை இழந்ததாக ஆகிவிடும்.
நாங்கள் இன்னன்ன சேவைகளைச் செய்தோம் அதற்காக எங்களுக்கு மக்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. எங்கள் சேவைக்காக எங்களுக்கு சான்றுகளும் கேடயங்களும் கிடைத்துள்ளன. அதன் மூலம் எங்களை அரசாங்கமே பாராட்டியுள்ளது, கவுரவித்துள்ளது என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வோமானால், அந்தப் புகழ் உலகில் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் மறுமையில் அதற்காக எந்த நன்மையும் அல்லாஹ்விடத்தில் கிடைக்கப்போவதில்லை. மட்டுமல்ல பிறர் பாராட்டிற்காக நாம் செய்த செயல் நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாகவும் அமைந்துவிடும்.
எனவே நாம் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து அல்லாஹ்விடத்தில் உள்ளம் உருகி பிரார்த்தித்து யா அல்லாஹ் இந்த காரியத்தை உனக்காகவே செய்கிறேன். அதற்கான நற்கூலியை வழங்குவாயாக! அதை நான் மேற்கொண்டதில் எனது உள்ளத்தில் உனக்கு விருப்பமில்லாத தவறான எண்ணங்கள் ஏற்பட்டிருக்குமானால் அதை நீ மன்னித்துவிடு! அதற்காக நீ என்னை தண்டித்து விடாதே! என்னுடைய நற்செயலை ஏற்காமல் திருப்பிவிடாதே! நீ எனது உள்ளத்தை தூய்மையானதாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்திக்க வேண்டும்.
“நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதையும் அல்லது நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 3:29
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி
அல்-ஜன்னத் மாத இதழ் பிப்ரவரி 2012

No comments:
Post a Comment