நம்முடைய கண்களுக்கு தெரிந்த பார்வைகளுக்கு அப்பாற்பட்ட பேரண்டத்தைப் படைத்து, இரட்சித்துக் காத்துக் கொண்டிருக்கும் படைத்த எஜமான் அல்லாஹ்வுடைய புகழ் ஓங்கச்செய்ய வேண்டும், அவனுடைய உரிமையை அவனுக்கே வழங்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகவே மனித சமுதாயம் படைக்கப்பட்டுள்ளது. அவனல்லாமல் உலகில் காணப்படும் அத்தனை பாக்கியங்களும் மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவற்றைப் படைத்துள்ளான். இந்த உண்மையை மறந்த மனித சமுதாயம் அவனுடைய இந்த பூமியில் அவனால் படைக்கப்பட்ட பாக்கியங்கள் யாவற்றையும் அனுபவித்துவிட்டு, அவனுக்கு நன்றி செலுத்த தவறிவிட்டனர், இவனைப் போன்று படைக்கப்பட்ட படைப்புகளிடத்தில் தஞ்சமடைகின்றனர். படைப்புகளையே படைக்கப்பட்டவனாக ஆக்கிவிடுகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தான் மனித சமுதாயத்தில் ஏராளம்.
படைத்தவனை கல்லிலும் மண்ணிலும் கையில் கிடைத்தவற்றிலெல்லாம் வடித்து, மனிதனே அவற்றிக்கு கடவுள் தன்மையை சார்ச் ஏற்றி, பின்னர் தானே செதுக்கிய கல்லின் முன்னால் தனது உடலின் பிரதானமான சிரசை வைத்து சாஷ்டாங்கம் செய்கின்ற கேவலமான நிலைக்கு மனித சமூகத்தில் பெரும்பாலன எண்ணிக்கையினர் சென்று கொண்டிருக்கின்றனர்.
இவர்களையெல்லாம் காப்பாற்றி, படைத்த அல்லாஹ்வின் முன்பு மட்டுமே சிரம் பணிய வேண்டும், அவனை மட்டுமே எஜமானாக ஏற்று அவனையே வணங்க வேண்டும். அதற்காகவே மனித சமூகம் படைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை எடுத்துரைத்து அவர்களுக்கு அழைப்புவிடுவதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தமிழகத்தில் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் “ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மூலம் ஜனவரி 14, 15.01.2012 ஆகிய இரு தினங்கள் கோவை மாநகரில் “படைப்புகளை விட்டும் படைத்தவனை நோக்கி” என்ற அரைகூவலோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநில மாநாடு அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
படைத்த அல்லாஹ்வின் வேதவரிகளை வாசித்து அவனுடைய புகழை, ஒங்கச் செய்வதைத் தவிர வேறு எதுவும் அந்த மாநாட்டில் காணப்படவில்லை. ஒவ்வொரு அழைப்பாளரும் அல்லாஹ்வுடைய ஒரு தன்மையைத் தலைப்பாக எடுத்துக் கொண்டு அதற்குரிய திருக்குர்ஆன் வசனங்களையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பொன் மொழிகளையும் எடுத்துக்கூறி விளக்கி மக்களை சிந்திக்கத் தூண்டியது பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.
படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான், அவனுக்கு எந்த கூட்டுமில்லை, எந்த இணையுமில்லை, அவனையே எல்லோரும் வணங்க வேண்டும், அவனுக்கே எல்லோரும் சிரம்பணிய வேண்டும், வேறு எந்த பொருளுக்கும் கடவுள் தன்மை கிடையாது என்பது எல்லா பேச்சாளர்களாலும் ஆணித்தனமாக உணர்த்தப்பட்டது. எனவே இரண்டு நாட்கள் மாநாட்டில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த 68 பேர் அல்லாஹ்வை படைத்தவனாக ஏற்று அவனுடைய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இணைந்தனர். இப்படிப்பட்ட மனமாற்றத்தை ஏற்படுத்திய வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
“எல்லா கொள்கை கோட்பாடுகளையும்விட சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியைக் கொண்டும், சத்திய நெறியைக்கொண்டும் அல்லாஹ் தான் தனது தூதரை அனுப்பி வைத்தான். இணைவைப்பாளர்கள் இதை வெறுத்தபோதிலும் சரியே” அல்குர்ஆன் 61:9
அல்-ஜன்னத் மாத இதழ் பிப்ரவரி 2012 – தலையங்கம்

No comments:
Post a Comment