அல்ஜன்னத் 2013 ஜூலை
அன்புள்ள கொள்கைச் சகோதர்களுக்கு…
அஸ்ஸலாமு அலைக்கும்…
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் அவன் அருளை சொரிந்து, வெற்றியாளர்கள் கூட்டத்தில்சேர்த்தருள்வானாக!வல்ல அல்லாஹ்வின் அருள் தனது
அடியார்களுக்கு மிகவும் அருகாமையில் நெருங்கி வருகின்றநாட்கள் தான் புனிதமிக்க
ரமலான் மாதத்தின் நாட்கள், அந்த நாட்களில் தன்னுடைய நல்அடியார்களுக்காகதனது
அருள்வாசலை திறந்து வைக்கின்றான். தனக்காகவே பகலெல்லாம் பசித்தும், இரவில் விழித்தும்அவனை வனங்கி வழிபடக் கூடியவர்களின் வணக்கத்தை ஏற்று, எழுநூறு மடங்கிற்கும் அதிகமாக நன்மைகளை வாரி
வழங்குகின்றான். தன் அடியார்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றான்.
அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகின்றான். அப்படிப்பட்டசிறப்பிற்குரிய
ஒருமாதம் நம்மைநோக்கி வருகிறது. புத்திசாலிகள் அந்தமாதத்தைதங்களுக்கு சாதகமாக
பயன்படுத்தி, நல்லறங்களைஅதிகமாகச் செய்து, அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாக மாறபாடுபடுவார்கள்.அந்த மாதத்தில்
முழுமையாக நோன்பு நோற்க வேண்டும். பரிசுத்த குர்ஆனை இறங்கிய இந்த மாதத்தில்அதிகமாக
குர்ஆனை ஒத வேண்டும். ஓதக் கேட்க வேண்டும், பொருள்அறிந்து ஓத
வேண்டும். ஓதத்தெரியாதவர்கள் ஓதக் கற்றுக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமாக இந்த
நாட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் தான தர்மங்களை அதிகமாகச்
செய்ய வேண்டும். நோன்பாளிகளுக்குநோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க
வேண்டும்.
ரமலானை முன்னிட்டு மர்கஸ்கள், பள்ளிவாசல்களில்ஏற்பாடுசெய்யப்படுகின்ற
விசேஷ மார்க்க விளக்கநிகழ்ச்சிகளில் பங்குபெற்று நமது மார்க்க அறிவை பெருக்கிக்
கொள்ள வேண்டும்.ஆக இந்த மாதம் மூமின்களை பக்குவப்படுத்தி எடுக்க வேண்டும், இந்த மாதத்தில் எடுக்கப்படும் பயிற்சி வருடம் முழுவதும் பயன் தரக்கூடியதாக அமைய வேண்டும்.
''இறை நம்பிக்கையாளர்களே!
உங்களுக்கு முன் சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்றுஉங்கள் மீதும் நோன்பு
கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாக
ஆகலாம்.
இப்படிக்கு
உங்கள் நலம் நாடும் கமாலுத்தீன் மதனி

No comments:
Post a Comment