Monday, July 1, 2013

அல்ஜன்னத் 2013(ஜூலை) தலையங்கம்



இஸ்லாம் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாத்துஇரட்சிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் மனித குலத்திற்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டமாகும்.மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழ்ந்தால் மறுமையில் வெற்றிபெற முடியும் என்பதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் படைத்த இறைவன் தெளிவுப்படுத்திவிட்டான். ஆன்மீகம் சமூகவியல்,பொருளாதாரம், அரசியல் இவையல்லாத மற்ற அனைத்து துறைகளுக்கும் தெளிவான விளக்கங்கள் இஸ்லாமில் உள்ளன. இந்த சட்டத்திட்டங்கள் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு மேலாக உலகம்முழுக்க கோடிக்கணக்கான மக்களால் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் காலத்திலும், அவர்களுக்குப் பின்னால் இஸ்லாமிய ஆட்சிசெய்த கலீபாக்கள் காலத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் எல்லாத்துறையிலும் அமுல்படுத்தப்பட்டன. இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏன் நாம் வாழும் இந்திய நாட்டிலும் இந்த சட்டங்கள் முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டுவருகின்றன.
இந்த சட்டங்களில் குடும்பவியல்  சட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருமணம், திருமணத்திற்குப் பின்னால் கணவன் மனைவியருக்கிடையிலான உறவு, குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வு, திருமண உறவு முறைகள், குழந்தைவளர்ப்பு, விவாகரத்துச் சட்டங்கள், பலதார மணம் இப்படி இல்லற வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்ப்புகள் இஸ்லாமில் உள்ளன.அதற்கு மூலாதாரமான திருக்குர்ஆன், அதற்கு விளக்கமாக இருக்கின்ற இறைத்தூதரின் வாழ்க்கை முறை இவற்றில் எல்லாவிஷயங்களும் இடம் பெறுகின்றன. அந்த சட்டதிட்டங்களை சாதாரண மக்களுக்கும் விளக்கும் நோக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமின் மூலாதாரமான குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்து எல்லா சட்டதிட்டங்களையும் தொகுத்து வழங்கிச் சென்றுள்ளனர்.
அவைகள் இன்றளவும் கல்விக்கூடங்களில் போதிக்கப்பட்டுவருகின்றன.உலகம் அழியும் நாள்வரை எக்காலத்தைப்பற்றியும் துல்லியமாகத்தெரியும் பேரறிவானாகிய வல்லஇறைவன் அல்லாஹ் அழிவுகள் வரை வரும் காலத்தையும் அந்த காலத்தில் வாழும் மக்களையும் கருத்தில் கொண்டே சட்டங்கள் வழங்கியுள்ளான்.
எனவே அந்த சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை,காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு இடம் தராதவை, அறியாமைகாலம் என்று வர்ணிக்கப்பட்ட அந்த காலத்தில் வழங்கப்பட்ட சட்டங்கள், அறிவியலில் உச்ச நிலையைஅடைந்துள்ள இந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளன.படைத்த இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட வாழ்வியல் சட்ட கிரந்தமான பரிசுத்த குர்ஆன் இன்றுவரை மாபெரும் புரட்சியை செய்துகொண்டிருக்கிறது.
அதில் ஒரு புள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது.மாற்ற வேண்டிய அவசியமுமில்லை. கோடிக்கணக்கான இதயங்களில் அதுபாதுகாக்கப்பட்டு வருகிறது.கோடிக்கணக்கான மக்கள்அதன் சட்டத்திட்டங்களின்பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று மனப்பூர்வமாக பின்பற்றிவருகிறார்கள்.
ஆனால் சில இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளின் மகத்துவத்தைப் புரியாமல்இஸ்லாமிய சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமென கூக்குரலிடுகின்றனர். குறிப்பாக சமீபத்தில்விவாகரத்து சட்டங்களில் மூக்கை நுழைத்து சுயவிளக்கங்களை கொடுக்க முற்படுகின்றனர்.
இஸ்லாமிய பெண்களிடம் இருக்க வேண்டிய காலச்சாரம் அறவேஇல்லாத அரசியல் வாதியான் ''பதர்ஸயீது'' ன்ற பெயர்தாங்கி முஸ்லிம் பெண், இஸ்லாமிய விவாகரத்துச்சட்டங் களை கொச்சைப்படுத்திக்கூறியுள்ளார், ''மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்புகள் இருப்பதாகவும், முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், ஒருமுஸ்லிம் கணவர் தானாக விவாகரத்துச் செய்ய முடியும், இது குறித்துசட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை'' என்றும் ''கணவனுக்குள்ள உரிமையைப் பறிக்க வேண்டும். விவாகரத்து செய்கின்ற அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.இஸ்லாமில் விவாகரத்து செய்கின்றஉரிமை கணவனுக்கு இருக்கிறது,அவ்வறே விவாகரத்து கேட்டுப்பெறுகின்ற உரிமை மனைவிக்கும்
இருக்கிறது. இது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிஇருக்கின்றஉரிமை,இஸ்லாம் வழங்கி இருப்பது போன்றஉரிமைகள் வேறு எந்த மதத்திலும் வழங்கப்படவில்லை, கணவனைப்  பொறுத்த வரையில் தனது மனைவியை கண்மூடித்தனமாக விவாகரத்துச் செய்துவிட முடியாது.அதற்கென குர்ஆன் விளக்கியுள்ள கட்டங்களை கடந்து, கடைசி முடி
வாகவே விவாகரத்திற்குச் செல்ல வேண்டும் என்றசட்டங்கள் குர்ஆனில்''பெண்கள்'' என்ற அத்தியாயத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. வேறு பல இடங்களில் இந்தசட்டங்களைப்பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.எந்தஒருஜமாஅத்தும், அல்லது காஜியும்தன்னிச்சையாக எடுத்தேன்கவிழ்த்தேன் என்ற முறையில் விவாகரத்துச் சான்று கொடுக்கமுடியாது. அப்படி கொடுக்கப்படுவதுமில்லை, இரு தரப்பு பிரச்சினைகளையும் அலசி ஆய்வு செய்து,இருவருக்கிடையில் சுமூகமானஉறவு ஏற்பட வேண்டும்,கசப்புணர்வுகள்மாறவேண்டும் என்பதற்கான அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு கடைசிகட்டமாக அவர்களுக்கிடையில் விவாகரத்து செய்து இருவரும் நிம்மதியாகவாழ்வதற்கு வழிவிடவேண்டும்.இதுதான் இஸ்லாமிய வழிமுறையாக இன்றுவரை பின்பற்றப்பட்டுவருகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாமிய பெண்களை நீதிமன்றங்களுக்கும்,காவல் நிலையங்களுக்கும்அலைய வைப்பதும், பல்லாண்டுகள் நீதிமன்ற வாசல்களில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பதற்கும் காரணமாக அமையும் சட்டங்களை ஒருபோதும் முஸ்லிம்கள்ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய சட்டங்கள் அவர்களுக்கு பிடிக்காவிட்டால் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டியது தானே தவிர அந்த சட்டங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகார மில்லை.

No comments:

Post a Comment