Saturday, June 8, 2013
சிலைகளால் சீரழியும் தமிழகம்
அல்ஜன்னத்(2013)ஜூன் தலையங்கம்
சிலைகளால் சீரழியும் தமிழகம்
ரூபாய்100கோடிசெலவில்மதுரையில்தமிழ்தாய்க்குசிலைஅமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்புபகுத்தறிவுவாதிகள்,சிந்தனையாளர்களிடத்தில்மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ்பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளச்சின்னமாகஇந்தச்சிலையைஅமைக்கவிருப்பதாகபெருமைப்பட்டுக்கொள்ளும் அரசு, இது மூடநம்பிக்கையின்அடையாளச் சின்னம் என்பதை புரிந்து கொள்ளதவறிவிட்டது. தமிழ் என்ற மொழிக்கு இப்படி ஒருசிலையை வடித்தது யார்? இதனால் தமிழ்மொழிக்கும்தமிழ் சமுதாயத்திற்கும் என்ன பெருமை சேரப்போகிறது? இது தமிழன்னையின் சிலை என்றால் தமிழ்தந்தை யார்? என்பன போன்ற கேள்விகள்சிந்தனையாளர்களிடமிருந்து எழுவது நியாயமானதே.
உலகத்தில்எந்தநாட்டிலும்எந்தஒருமொழிக்காகவும்சிலைஎழுப்பியதாக வரலாறு இல்லை. ஆனால்தமிழகம் எல்லாவற்றிற்கும்சிலை வைத்துபழக்கப்பட்டுவிட்டகாரணத்தினால்மொழிக்கும்ஒருசிலைஏன் எழுப்பக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்சிலைதிட்டம் தலை தூக்கியிருக்கிறது. அமெரிக்காவில்வைக்கப்பட்டுள்ள சிலை ஒரு மொழிக்காக வைக்கப்பட்டதல்ல, அது நாட்டு சுதந்திரத்தின் அடையாளச்சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. (அதுவும் அறிவுக்கு
பொருந்தாது தான்) அதோடு ஒப்பிட்டு தமிழ் மொழிக்கு
சிலை எழுப்பப் போகிறோம் என்று அறிவித்திருப்பது
அறிவுடமையாகாது.
பொதுவாக சிலைகளை வடிப்பதும், அதைப்புனிதப்படுத்துவதும் அதற்கு மாலை மரியாதை செய்துகண்ணியப்படுத்துவதும் எந்த வகையிலும்அறிவுக்குப்பொருந்தாததாகும்.ஆனால்பகுத்தறிவுவாதிகள்என்றுதங்களைபெருமையாகப்பேசிக்கொள்ளும்தமிழகஅரசியல்வாதிகள் காண்கின்ற திசையெல்லாம் தங்கள்தலைவர்களுக்கு சிலைகளை எழுப்புவதும்ஆண்டுதோறும் அதைக் கழுவி மரியாதை செய்வதும்வழக்கமாகிவிட்டது. சிலை அமைப்பதிலே அரசியல்கட்சிகள் தங்களுக்குள் போட்டா போட்டி ஏற்படுத்துகின்றனர். திருக்குறள் எழுதிய வள்ளுவனுக்கு அவர்கள் சிலை எழுப்பினார்கள் என்றால் நாங்கள் அவர்களைவிட குறைந்தவர்கள் அல்ல. தமிழ் மொழிக்கேசிலை எழுப்பிக் காண்பிப்போம் என்ற பாணியில்அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை வளர்ப்பதற்காகஇதுபோன்ற பண்பற்ற செயல்களைச் செய்கிறார்களேதவிர தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக அல்ல என்பது தான் உண்மை.உண்மையில் தமிழ்மொழியின் மீது இவர்களுக்குப் பற்றுஇருக்குமானால் உலக பல்கலைக்கழகங்களில், ஏன்நமது நாட்டிலிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கென தனி இருக்கைகள் திறப்பதற்கும், தமிழ் ஆய்வு மையங்கள் அமைப்பதற்கும்,பழம் பெரும் மொழி இலக்கியங்களைத் தமிழ்மொழியில்கொண்டு வருவதற்கும், தமிழ் நூல்களை மாற்றுமொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கும் திட்டங்கள்தீட்டியிருப்பார்கள்.இன்று தமிழகத்தில் ஏராளமான சிலைகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. அவற்றால் மிகப்பெரிய பாதிப்புக்கள்தமிழகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறுகின்றன. அந்த சிலைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டு கை, கால் முறிந்துவிட்டால் அதனால் மிகப்பெரிய கலவரங்களும், அரசியல், மத மோதல்களும்தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறுகள். கடந்த கால கசப்பான உண்மைகள். சில சந்தர்ப்பங்களில் சிலைகளுக்குஅரசின் மூலம் பாதுகாப்பு அளிக்கப் பட்டது.அதற்காக மக்கள் பணம் பாழாக்கப்படுகின்றது.கடலோரப்பகுதிகளை நாசப்படுத்தி, அங்குஅரசியல்வாதிகளுக்காக சிலைகளையும் சமாதிகளையும் எழுப்பி,அதை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் மக்கள் பணம் பலகோடிரூபாய் பாழாக்கப்படுகிறது.சிலைகளைப்பார்த்து தமிழர்கள்தங்கள் பண்பாட்டை வளர்த்துக்கொள்வார்கள் என்ற தத்துவதும்போலியானது, எத்தனை பேர்சிலையைப் பார்த்து தமிழ்மொழியைவளர்த்துள்ளார்கள்? மொழிக்கும்சிலைக்கும் என்ன உறவு உள்ளது?என்று கேட்டு எதிர்கால சமுதாயம்எள்ளி நகையாடப் போகிறார்கள்.சிலை வழிபாடு பகுத்தறிவுக்குபொருந்தாதது என்று பிரச்சாரம்செய்த பெரியாருக்கும் சிலைகளைஎழுப்பி, அவர் கொள்கையை குழிதோண்டி புதைத்துள்ளனர். மதக்கலவரங்களும், ஜாதிச் சண்டைகளும் தமிழகத்தில் தலை தூக்குவது சிலைகளால் தான், இதை அரசுகவனத்தில் கொண்டு ஒட்டுமொத்தசிலைகளையும் அப்புறப்படுத்தி,தமிழகத்தை சுத்தப்படுத்துவதின்மூலம் தான் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக ஆக்க முடியும்.100 கோடி ரூபாயில் ஒரு சிலை எழுப்பப்போவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். இது சிறிய தொகையல்ல,இது யாருடைய பணம்? முதல்வரின்சொந்த பணத்தில் செய்வதாகஇருந்தால், அதுவும் அறிவுக்குப்பொருந்தாததுதான் என்றாலும்அதை நிர்பந்தப் படுத்தமுடியாது.ஆனால் இந்த 100 கோடி ரூபாய்பொது மக்களின் வரிப்பணம் என்பதை மறந்து விடக்கூடாது. இன்றுநாட்டில் அடிப்படை வசதிகள்இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றார்கள். தண்ணீர் பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடுகள்போன்ற ஏராளமான தேவைகள்நாட்டில் இருக்கின்றபோது,இவ்வளவு பெரிய தொகையைக்கொண்டு சிலையை வடிப்பது என்பது எந்த வகையிலும் நியாயமற்றது.இதனால் தமிழ்மொழிக்கோ, தமிழ்மக்களுக்கோ, மனித சமுதாயத்திற்கோ கடுகளவு கூட பயனில்லை.எனவே இந்தத் திட்டத்தை அரசுகைவிடுவதோடு தமிழ் நாட்டிலுள்ளஅத்தனை சிலைகளையும் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment