Saturday, June 8, 2013

மனம் திறந்த மடல் அல்ஜன்னத் ஜூன்(2013)


அன்புள்ளகொள்கைச்சகோதர்களே ! அஸ்ஸலாமுஅலைக்கும வல்லஅல்லாஹ் எல்லோருக்கும் எல்லாவிதமான பாக்கியங்களையும வழங்கி நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக!இன்றைய இளைய தலைமுறையின் போக்குமிகவும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. அவர்களைவழிகெடுப்பதற்கான எல்லாவிதமான சீர்கேடுகளும் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவர்கள் எளிதாககெட்டுப்போவதற்கான எல்லா வாசல்களும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களை அழிவுப்பாதையில்அழைத்துச் செல்வதற்கு பல குழுக்கள் காத்திருக்கின்றன. அரசும் அவர்களுக்கு துணைபோகின்றது. அவர்களைநேர்வழிபடுத்துவதற்கான எந்த திட்டமும் அரசிடமில்லை. கல்விக் கூடங்களில் கலாச்சார சீரழிவு மந்து விட்டன.இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமதுஎதிர்காலசந்தத்திகளைப் பற்றி பெரிதும் நாம் கவலைப்படகடமைப்பட்டுள்ளோம். பாலர் பருவத்திலிருந்தே முறையான இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சிகள்அவர்களுக்கு கொடுத்து நமது கண்காணிப்பில் அவர்களை வளர்க்க வேண்டும். சிறிய பருவத்திலிருந்தேஇறையச்சத்தை அவர்கள் இதயத்தில் ஏற்ற வேண்டும். பேசுகின்ற பருவத்தை அடைந்த உடனேஅல்லாஹ்வைப் பற்றி போதிக்க துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய முதல்அறிவு; படைத்தவன் யார்? என்பதைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். இதைத்தான் இறைத்தூதர்கள்தங்கள் சந்ததியினருக்குப் போதித்துள்ளனர். புரிகின்ற பருவம் வந்த உடனே அருகாமையிலுள்ள திருக்குர்ஆன்போதனா பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து இஸ்லாமிய சுற்றுச் சூழல்பழகி அவர்கள் வளர்க்கப்பட வேண்டும். ஏழை எளிய குழந்தைகளுடன் சேர்ந்து பழகுகின்ற பண்பாட்டைவளர்க்க வேண்டும். பணிவு என்கின்ற பண்பு அவசியம் குழந்தை பருவத்திலிருந்து போதிக்கப்பட வேண்டும், குறிப்பாகவசதிவாய்ப்புள்ளவர்களின்குழந்தைகளிடத்தில்இந்தபண்பு அவசியம்வளர்க்கப்படவேண்டும்.இல்லையென்றால்எதிர்காலத்தில் அதன் விளைவை பெற்றோர்களும், மற்றவர்களும் அனுபவிக்க வேண்டியதுஏற்படும்.குழந்தை பருவத்திலிருந்தே பள்ளிவாசல்களுடன் தொடர்புடையவர்களாக அவர்களை தயார்படுத்த வேண்டும்.ஏழு வயதை அடைந்துவிட்டால் அவசியம் தொழுகையை நிறைவேற்ற அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.சமூகக் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் எதிர்காலத்தில் உணரும் பொருட்டு நாளொன்றுக்குஐங்கால கூட்டுத்தொழுகையில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். இப்படி கண்காணித்து சிறார்களைவளர்க்காதவரை எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குரியாக ஆகிவிடும்.

No comments:

Post a Comment