Thursday, May 2, 2013

அல்ஜன்னத்(மே)2013 இதழ் தலையங்கம்





இன்று மனித சமுதாயம் கல்வி வளர்ச்சியில்முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் கல்வியில் புதிய புதிய துறைகள் அறிமுகம்செய்யப்படுகின்றன. மேல் நிலைப்பள்ளியில் படித்துமுடித்தவர்கள் அடுத்து எந்தத் துறையை தேர்வுசெய்யலாம் என்பதில் திணறிக்கொண்டிருக்கின்றனர்.எந்தத் துறையில் படித்து பட்டம் பெற்றால் அதிகம்ஊதியம் கிடைக்கும் என்பதையே குறிப்பாகக்கொண்டு மாணவர்கள் தங்கள் சிந்தனையைச்செலுத்திவருகின்றனர். இந்த உலகில் சுகபோகமாக
வாழ வேண்டும். அதற்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்ட வேண்டும் என்பது தான் மனிதவாழ்க்கையின் இலட்சியம் என மனிதன் முடிவுக்குவந்துவிட்டான்.முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களும் இதேசிந்தனையிலேயே சென்று கொண்டிருக்கின்றனர்.எல்லா சமூகங்களும் சிந்திப்பது போன்று இவர்களும்சிந்திக்கின்றார்கள், எல்லோரையும் போன்று இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களுக்கென எந்த தனித்தன்மையும் இல்லாமல் போய்விட்டது.உலகக் கல்வியில் எதைக் கற்றாலும் மார்க்கக்கல்வியையும் சேர்த்துக் கற்க வேண்டும். மறுமையில்வெற்றி பெறுவதற்கு வழிகாட்டக்கூடிய கல்விஇஸ்லாமிய கல்வி மட்டும் தான். அந்தக் கல்வியைகுர்ஆன் சுன்னாவிலிருந்து மட்டுமே பெறமுடியும்.காரணம் இந்த இரண்டு மட்டுமே இஸ்லாத்தின்அடிப்படை அதில் தான் படைத்த அல்லாஹ்வைப்பற்றியும், அவனுடைய தன்மைகளைப் பற்றியும்உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றியும்,எப்படி வாழ்ந்தால் மறுமையில் வெற்றிபெற முடியும்என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.இந்த இஸ்லாமிய கல்வி மட்டுமே நம்மை மறுமையில்வாழவைக்கும் என்பதில் இன்றைய இஸ்லாமியசமுதாயம் கவனமற்று இருக்கின்றனர். இதன்காரணத்தினால்தான் வயிற்றுப் பிழைப்பிற்கானகல்வியை மட்டும் கற்றுக் கொடுக்கின்ற கல்லூரிகளில்இஸ்லாமிய இளைஞர்களின் கூட்டம் அலை மோதுகிறது. அந்த கல்லூரிகளில் படிப்பதற்கு இடம்பிடிப்பதற்காக லட்சக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு கல்லூரிகளின் வாசலில் வரிசையில்
நிற்கின்றனர்.படித்து விட்டு வெளியில் வருகின்றவர்களிடத்தில் நல்லபண்புகளைக்காண முடிவதில்லை. ஒழுக்கமாண்புகளில்லை. மூத்தவர்களை மதிக்கின்ற தன்மைகள்இல்லை. இப்படி உருவாகிய பிள்ளைகளை நினைத்துமனம் உடைந்துபோன பெற்றோர்கள் எத்தனையோபேர், ஏன் இவனை படிக்கவைத்தோம் என்றுஎண்ணிவிரக்தியடைகின்றனர்.இதிலிருந்துவிதிவிலக்காகவிரல்விட்டு எண்ணப்படுகின்ற ஒரு சிலர்படித்துத்தேறிவந்துபணியில் அமர்ந்துவிடுவார்களானால்சமுதாயத்தைப்பற்றியஎந்தவிதமானகவலையுமில்லாமல்தான்,தன்னுடையதொழில்எனசுயநலவாதிகளகமாறிவிடுகின்றனர்.அவர்களால்சமுதாயத்திற்குஎந்தவிதபயனுமில்லை.இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தின் உள்ளே இருந்துகொண்டே சமுதாயத்திற்கும்தான்சார்ந்துள்ளமார்க்கத்திற்கும் எதிராகச்செயல் படக்கூடியவர்களாகமாறிவிடுகின்றனர்.காரணம்இவர்கள்படிக்கின்ற காலத்தில்இஸ்லாமியவிரோதசிந்தனையாளர்களால்பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.இஸ்லாத்திற்குஎதிரானநச்சுக்கருத்துக்களைஇவர்களுடையஇதயத்தில்விதைத்துவிடுகின்றனர்.அதைஅப்படியேநம்பிவிடுகின்ற இந்தமாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும்அதைபிரதிபலிக்
கச்செய்கின்றனர்.அதைமுற்ப்போக்குசிந்தனையாகவும்கருதுகின்றனர்.இந்தபோக்குஇப்படியேதொடர்ந்துசெல்லுமானால்நாளாவட்டத்தில் எதிர்காலஇஸ்லாமிய சந்ததிகள் பெயரளவில்முஸ்லிம்களாக இருந்துகொண்டுஅந்நியகலாச்சாரத்திற்குஅடிமையாகிஇஸ்லாத்தை வெறுக்கின்றவர்களாக மாறிவிடுவார்கள்அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்!இதற்கெல்லாம்அடிப்படைகாரணம்இஸ்லாமியகல்வியை புறக்கணித்ததுதான்! சிறிய பருவத்திலிருந்தேஅவர்களுக்கு புகட்டவேண்டியஇஸ்லாமியஅறிவைபுகட்டிவளர்க்காததுபெற்றோர்களின் தவறாகும்.பெற்றோர்களுக்குமார்க்கத்தைப்பற்றிகவலையும், இஸ்லாமியஉணர்வும், மறுமை விசாரணையைப் பற்றிய அறிவும் இருந்தால்தானே தங்கள் பிள்ளைகளைப்பற்றிகவலைப்படுவார்கள். அவர்களேஇஸ்லாமியவிரோதப்போக்கில்இருக்கின்றபோதுஅவர்களுடையபிள்ளைகளைஇஸ்லாமியஅறிவுடையவர்களாகஉருவாக்க
வேண்டும்என்றஎண்ணம்அவர்களிடத்தில்எப்படிஉருவாகும்?இஸ்லாமிய கல்வியை கற்பதின் அவசியம் என்ன? அதை கற்பதினால்
கிடைக்கின்றநன்மைஎன்ன?அதைகற்காமல்உதாசீனப்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள்என்ன? என்பதைப் பற்றிய அறிவுசிறிய பருவத்திலிருந்தே இளம் சிறார்களுடைய இதயங்களில் ஊட்டிக்
கொண்டே இருக்க வேண்டும்.நம்மைப் படைத்த அல்லாஹ்வைப்
பற்றிஅறிவோ,இஸ்லாம்மட்டுமே,படைத்தஇறைவனால்அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பதுபற்றியவிளக்கமோ, மனிதசமுதாயத்திற்கு
வழிகாட்ட வந்த ஒப்பற்ற ஒரேதலைவர் முஹம்மது(ஸல்) அவர்
கள் தான் என்பது பற்றிய தெளிவோபெரும்பாலான முஸ்லிம் மாணவமாணவியருக்கு அறவே இல்லைஎன்பது தான் உண்மை, இவ்வாறிருக்க அவர்கள் எப்படி இஸ்லாமிய வாழ்க்கைநெறியைப் பற்றியும்,இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப்பற்றியும் தெரிந்து தங்களுடையவாழ்க்கையில்பின்பற்றமுடியும்?இஸ்லாமியக்கல்வியைக் கற்றால்மட்டுமே அல்லாஹ்வின் அருளும்,அவனுடைய திருப்தியும்நமக்குக்கிடைக்கும்,அந்தகல்வியின்மூலம்தான்மண்ணறையில்கேட்கப்படும்கேள்விகளுக்குசரியானபதில்சொல்லமுடியும், மறுமைவிசாரணையின்போதுவெற்றிபெற்றுசொர்க்கம்செல்லமுடியும் என்பதைஆணித்தரமாக இளைஞர்களுக்குஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment