அல்ஜன்னத் மார்ச்(2013)தலையங்கம்
இந்திய நாடு பல்வேறுபட்ட மதத்தையுடையவர் களும், பல்வேறுபட்ட மொழி, கலாச்சாரத்தையுடையவர் களும் வாழுகின்ற நாடு இந்த நாட்டில் பிறந்து, குடி உரிமை பெற்று வாழுகின்ற ஒவ்வொருவரும் இந்த நாட்டிற்குச் சொந்தக்காரர்கள். ஒவ்வொருவருக்கும் சம உரிமை, சம சுதந்திரம் உள்ளது. நாம் யாரையும் வேற்று மைப்படுத்திப் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. அப்படி பார்ப்பது குற்றமாகக் கருதப்படும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தான் விரும்புகின்ற மதத்தை, தான் விரும்புகின்ற கலாச்சாரத்தைப் பின்பற்று வதற்கு முழு உரிமையும் முழுமையான சுதந்திரமும் உள்ளது. தான் விரும்பி ஏற்றுக்கொண்ட கொள்கையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும், தன் கொள்கையின்பால் அழைப்பதற்கும், அதில் சேர்ப்பதற்கும் அனுமதி இருக்கிறது.
இந்த நாட்டில் தற்போது சுமார் இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோருமே இந்த நாட்டின் பிரஜைகள், இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த மார்க்கம் படைத்த இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் எனவும், அதை ஏற்று தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்று மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையிலும் வெற்றிபெற முடியும் என நம்புகின்றனர். தங்களுக் கென தேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த உன்னதமான கொள்கை எல்லா மனிதர்களுக்கும் போய் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர், மட்டுமல்ல அதைச் செய்வது தங்கள் கடமை எனவும் கருதுகின்றனர். இதன் காரணத்தினால் பல்வேறுபட்ட மதத்தையுடைய மக்களிடையில் பிரச்சாரம் செய்து இஸ்லாமின் தூய கொள்கையை எடுத்துச் சொல்லி அதை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர். இந்த அழைப்பை ஏற்று பல்வேறுபட்ட மதத்தையுடைய இந்த நாட்டில் உள்ளவர்கள் இஸ்லாமை குடும்பத்தோடு ஏற்க முன் வருகின்றனர். வேறு எந்தவிதமான பிரதிபலனை யும் எதிர்பார்க்காமல் படைத்தவனின் திருப்தியையும், மறுமையில் வெற்றியையும், இலட்சியமாகக் கொண்டே இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்றனர்.
இஸ்லாமின் இந்த அசுர வளர்ச்சியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத இந்த நாட்டில் உள்ள மத வெறி பிடித்தவர்களும், மனிதநேயமற்றவர்களும் எப்படியாவது இஸ்லாமின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்பதற்காக எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் மேற்கொள்ளுகின்றனர். இஸ்லாம் வளர்ந்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள். இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்திவிடுவார்கள். கண் மூடித்தன மான வாழ்க்கையை நம்மால் வாழமுடியாது என்ற அச்சம் அவர்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது. எனவே முஸ்லிம்களை மற்ற மதத்தவர்களிடத்தில் மோசமான வர்களாகவும், மனித நேயமற்றவர்களாகவும் சித்தரிக்க வேண்டும், முஸ்லிம்கள் ரத்தவெறி பிடித்தவர்கள், பயங்கரவாத, வன்முறைச் செயல்களைச் செய்யத் தயங்கமாட்டார்கள் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சதி வேலைகளில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.
சமீப காலமாக இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்வங்கள், பயங்கரவாத செயல்கள் எல்லாவற்றையுமே மதவெறி பிடித்த சங்பரி வார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், பீ.ஜே.பி., போன்ற அமைப்புகளே திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளன என்பது புலனாய்வு தரும் செய்தியாகும். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கான பயிற்சியைத் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு கொடுத்து, முஸ்லிம்களின் பெயரிலேயே அதைச் செயல்படுத்து கின்றனர்.
குஜராத்திலே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், ஐதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதிலும், அஜ்மீரிலும், மராட்டியத்தில் உள்ள மாலேகான் மசூதியிலும் நடந்த குண்டுவெடிப் புச் சம்பவங்களின் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கள் செயல்பட்டன, நாட்டில் தீவிர வாத செயல்களைப் பரப்புவதற்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின் றன. ஆனால் இந்த அமைப்புகள் இதுபோன்ற வன்முறைச் சம்பவங் களைத் திட்டமிட்டு நடத்திவிட்டு இந்த குற்றத்தைச் சிறுபான்மையின ரின் தலையிலே போட்டு அவர்களைக் காரணம் கூறுகிறார்கள். இந்த உண் மையை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் மிக முக்கிய துறையான நாட்டின் உள் விவகாரங்களை அறிகின்ற உள்துறை அமைச்சரே இந்த உண்மையைப் பொது மக்களி டையில் போட்டு உடைத்துவிட்டார். இதற்கு மேல் தீவிரவாதத்தை யார் பரப்புகிறார்கள் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. நாட்டினு டைய எல்லா இரகசியங்களையும் கண்டறிகின்ற உளவுத்துறைகளைத் தன் கையில் வைத்திருக்கும் அமைச் சர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றால் உளவுத்துறையின் அறிக்கை கள் தனக்குக் கிடைக்காமல் சொல்லியிருக்க மாட்டார் என்பது தான் உண்மை. இந்த குண்டு வெடிப்பு சம்பங்களை யார் முன் நின்று நடத்தினார்கள் என்பதற்கு அரசே சாட்சி கூறியுள்ளது. யார் குற்றவாளி என தீர்ப்பு வழங்குவதற்கு இதைவிட வும் வேறு ஆதாரம் தேவையில்லை.
ஏற்கனவே இந்த வன்முறைச் சம்பவங்களில் ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் சம்பந்தப்பட்டுள் ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.ஜே.பி. தலைவர்களுக்கும், இந்த சாமியார்களுக்குமிடையில் நெருங் கிய தொடர்பு இருக்கிறது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச் சரின் வாக்குமூலம் இந்த சம்பவங் களில் யார் குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்கிறது. இவ்வளவு தெளிவாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பின்பும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தெளிவாகச் சொல்வதானால் முஸ்லிம் சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, இந்த சமுதாயத் தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டு மென சங்பரிவார அமைப்புகளும், மதவெறி பிடித்த, நாட்டின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க நினைக்கின்ற மனிதநேயமற்றவர்களும் திட்டம் தீட்டுகின்றனர். நிச்சயமாக அவர் களுடைய திட்டங்களில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறப் போவ தில்லை. அவர்கள் இந்த சதிவேலை களில் ஈடுபடும் போதெல்லாம் இஸ் லாமிய மார்க்கத்தில் இணைகின்ற வர்களின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டுதான் செல்கிறது என்பதைக் கண் கூடாகப்பார்த்து வரு கின்றோம். இந்த பிரிவினைவாதக் கும்பல் தங்கள் சதித்திட்டத்திற்கு யாரைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே திருந்தி இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட வரலாற்றைத்தான் கடந்த காலங்களிலே நம்மால் காண முடிந்தது.
தற்போது இந்தியாவில் முஸ்லிம் களின் எண்ணிக்கை இருபது கோடி, இன்னும் சிறிது காலத்தில் அது பல கோடிகளாக அதிகரிக்கும், இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மதவெறி பிடித்து நாட்டைத் துண் டாட நினைக்கின்றவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். குற்றவாளி கள் யார் என்று நன்றாகத் தெரிந்த பின்பும் கூட அரசு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இஸ்லாம் படைத்த இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி, அதை ஏற்று பின்பற்றாதவரை மனித வாழ்க்கையில் வெற்றி இல்லை. எனவே இதை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற சங்பரிவார அமைப்புகள் புரிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து, இஸ்லாமின் மீது களங்கம் கற்பிக்க நினைப்பார்களானால் அது அவர் களுக்குக் கேடாக அமையும்.
”அல்லாஹ்வுடைய ஒளியைத் தங்களுடைய வாய்களினால் ஊதி அணைத்துவிடலாமென அவர்கள் கருதுகிறார்கள். அல்லாஹ் தனது ஒளியை (இஸ்லாமை) பூர்த்தியாக் கியே தீருவான். இறை நிராகரிப்பாளர் கள் வெறுத்த போதிலும் சரியே” அல்குர்ஆன் 61:8

No comments:
Post a Comment