Wednesday, February 13, 2013

இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு

இறைவனின் திருப்பெயரால்
ஈருலக வெற்றிக்கு இஸ்லாம் ஒன்றே வழி

இன்ஷா அல்லாஹ், கன்னியாகுமரியில் மாபெரும் ஒருநாள்

... இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு

நாள்: 23.02.2013 சனி காலை 9மணி முதல்
இடம்: தவ்ஹீது பள்ளிவாசல் புதிய அரங்கம், கன்னியாகுமரி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.

இறைவனின் திருப்தியை அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்யவேண்டிய மனிதசமுதாயம் இன்று மேல் நாட்டவர்களின் வழிமுறையை பின்பற்றி செல்லத் துவங்கிவிட்டது.

தன்னைப்படைத்த இறைவன் யார்?

எதற்காக படைத்தான்?

மரணித்த பின் மனிதனின் நிலை என்ன?

இதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்கள் மனோ இச்சைக்கு அடிமையாகி சீரழிந்து தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கின்றது மனிதரில் ஒரு கூட்டம்.

இறைவேதம் கூறும் கொள்கை தெரியாமல், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கம் புரியமல், தர்ஹா, தாயத்து, தட்டு, தரீக்கா ஆகிவற்றை இதுதான் இஸ்லாம் என்று மக்களை நரகத்தின் விளிம்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம்.

இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை அறிய முன் வராமல் உலகாதாயக்கல்லியை மட்டும் பயின்று, ஒழுக்கக்கல்லியை கற்காமல் இன்டர்நெட், செல்போன் என சுற்றித்திறிகிறது மாணவர்களில் ஒரு கூட்டம்.

இந்த உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தது என்ன? என்பதை அறிந்து கொள்ளவும்.

இஸ்லாத்தின் மீது கூறப்பட்டுவரும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும்

மனித சமுதாயத்தின் இம்மை மறுமை வாழ்க்கையின் வழிகாட்டியான இஸ்லாமை அதன் தூய வடிவில் அறிந்து நடந்திடவும்
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு!

குடும்பத்துடன் அணி திரண்டு வாரீர்!!

உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!!!

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

No comments:

Post a Comment