Sunday, February 3, 2013

அல்ஜன்னத்2013(பிப்ரவரி)தலையங்கம்

அறிவியல் வளர்ச்சியில் விண்ணைத் தொடும்ஆராய்ச்சியில் இறங்கி, நாளுக்கு நாள் புதிய புதியகண்டுபிடிப்புகளையும், நவீன அறிவியல் சாதனங்களையும் உருவாக்கி, மனித சமுதாயம் ஒரு புறம் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது.வியக்கத்தக்கவிதத்தில் தனக்கு வழங்கப்பட்ட அறிவைப் பயன்படுத்தி மனித மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமானஉபகரணங்களை மனிதன் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றான்.இவ்வளவுபெரியமுன்னேற்றத்தைக்கண்டுவிட்டமனிதசமூகம்ஒழுக்கவிஷயங்களிலும்,வாழ்வியல்கலாச்சாரத்திலும் நாளுக்கு நாள் பின்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது. எல்லாப்படைப்புகளைவிடவும்,சிறப்பாகப்படைக்கப்பட்டமனிதன்அனைத்துப் படைப்பினங்களைவிடவும், மிகவும் தரம் கெட்ட நிலைக்குசென்று கொண்டிருக்கின்றான். தன் இனமானமனிதஇனத்தவர்களுடன்கூட மனிதாபிமான முறையில்நடக்கத் தெரியாதவனாக வாழ்கிறான். கொடியவிலங்குகள்கூடஇவனுடையசெயலைப்பார்த்துவெட்கப்படுமளவிற்கு தரக் குறைவாக நடந்துக் கொள்கின்றான். காமவெறி பிடித்து, வெட்க உணர்வின்றிமிருகங்களைவிட மிக மோசமாக தன் இச்சையைத்தீர்த்துக் கொள்ள தயங்குவதில்லை.

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டின்தலைநகரிலேநடைபெற்றுள்ளது.பேருந்தில்ஆறுபேர்கொண்ட காமக்கொடூரக்கும்பல் ஈவிரக்கமின்றி இந்த வன்முறை சம்பவத்தில்ஈடுபட்டுள்ளது. 23வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணைஆறு பேர் சேர்ந்து பேருந்து ஒடிக்கொண்டிருக்கும்நேரத்திலே கொடூரமான முறையில் கற்ப்பழித்து உயிருக்கே உலை வைத்துள்ளனர். இந்த ஆறு பேர்களில்ஒருவர் 18 வயது பூர்த்தியாகாத மைனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூரச் சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுக்காத கட்சிகளோ, அரசியல் தலைவர்களோ இல்லைஎன்று சொல்லும் அளவிற்கு எல்லோரும்கண்டனக்குரல்எழுப்பிவருகின்றனர்.ஆர்ப்பாட்டங்களும்பேரணிகளும்நடத்துகின்றனர்.இதுபோன்றகொடூரசம்பவங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைச் சட்டங்கள் கொண்டுவர வேண்டும்என பல அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் நாடெங்கிலும்கற்பழிப்பு சம்பவங்களும், பாலியல் பலாத்காரங்களும்சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறதுஎன்பதையும் செய்தி சாதனங்களின் வாயிலாகதெரிந்து கொண்டிருக்கின்றோம். தலைவர்களின்அச்சுறுத்தல்களாலும், அறிக்கைகளாலும் இதுபோன்றகொடூர சம்பவங்கள் நடப்பதிலிருந்து மக்களைத்தடுத்து நிறுத்த முடியவில்லை. வழக்கமாக நடப்பதுநடந்துகொண்டே இருக்கிறதே தவிர எந்த மாற்றமும்ஏற்படவில்லை.இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் நடப்பதற்குண்டான காரணங்களைக் கண்டறிவதில் இறங்கியசில மாற்று மத ஆன்மீகவாதிகள் தங்களுடைய கருத்
தைத் தெரிவிக்கும் போது, ”பெண்களின் ஆடைக்குறைப்புத்தான் முக்கிய காரணம் என்றும், பெண்கள்தங்கள் கணவனுக்கு மட்டுமே காட்டவேண்டியபகுதிகளை பிற ஆடவர்களும் பார்த்து ரசிக்கின்றவிதத்தில் வெளியே திறந்து காட்டிச் செல்வதாலேயேஇது போன்ற பாலியல் கொடுமைகள் நடக்கின்றன.எனவே இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தியுள்ளஆடைஒழுங்குகலாச்சாரத்தைப்பின்பற்றுவதே இதற்குசரியான தீர்வு” என்று தமது கருத்தை வெளியிட்டுள்ளனர். அதைக் கூட ஜீரனிக்க முடியாமல் சில மதவாதிகள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எனவே இதுபோன்ற அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆர்ப்பாட்டம் நடத்துவதின் மூலமோ,உண்ணாவிரதங்கள் இருப்பது மூலமோ, பேரணிகள்நடத்துவதாலேயோ, விதவிதமான அறிக்கைகளைஅரசியல்வாதிகள் வெளியிடுவதாலேயோ ஒழித்துவிடமுடியாது. இந்தக்கொடுமைகளுக்கானமுக்கியகாரணத்தைக்கண்டறிந்துஅவற்றைஆணிவேரோடுபிடுங்கி எறிந்து, மனித சமூகத்தை சீரிய வழிக்குஅழைத்துச்செல்லும்சிறந்தவழிமுறைகளைக்காட்டி,அவற்றைப்பின்பற்றுமாறுஅனைத்துத்தரப்புமக்களையும்கட்டாயப்படுத்துவதால் மட்டுமேமனிதர்களைச்சீரழிவிலிருந்துகாப்பாற்றமுடியும்.மனிதர்களைஅழிவின்பக்கம்அழைத்துச்செல்லுகின்றஅனைத்துவாசல்களையும்அரசாங்கம்திறந்துவிட்டு,அவற்றைச்செய்வதற்கான அனுமதியையும்வழங்கிவிட்டு, அதனால் ஏற்படுகின்ற தீய விளைவுகளை மட்டும் தடுத்து நிறுத்த முற்படுவது அறிவுடமையாகாது. நாடெங்கும் வீதிகளிலே மதுக்கடைகளைஅரசாங்கமே திறந்து வைத்துள்ளது. தனக்கு வேண்டியது வருமானம் ஒன்றுமட்டுமே. நாட்டு மக்கள்எவ்வளவுசீரழிந்தாலும்அதைப்பற்றிஎந்தகவலையுமில்லைஎன்றநிலைக்குஅரசாங்கம்சென்றுகொண்டிருக்கின்றகாரணத்தினால் இளைஞர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலை மோதுவதைப் பார்க்க முடிகிறது. குடி குடியையும் கெடுக்கும், நாட்டையும் கெடுக்கும், எல்லாவற்றையும் கெடுக்கும் கொடியது என்ற காரணத்தினால் தான்இஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது.
தனியாகச் செல்லும் பெண்ணை எவ்வாறு கடத்திச்செல்ல வேண்டும்? தனிமையில் எவ்வாறுகற்ப்பழிக்கவேண்டும்?கூட்டாகச்சேர்ந்து எவ்வாறு கர்ப்பழிக்கவேண்டும்? சீர்கேடுகளையெல்லாம் எப்படி நடத்த வேண்டும் என்று நடித்துக் காட்டுவதே சினிமாவும், சீரியலும்
தான்,அதைப்பார்த்துத்தான்இளையதலைமுறையினர்வெளியில்நடத்திக்காண்பிக்கிறார்கள்.இதற்குஆக்கமும்ஊக்கமும்கொடுப்பதே அரசாங்கம் தான்.
அதைவளர்ப்பதற்குமானியம்அரசாங்கம்வழங்குகிறது.இந்தஅசிங்கங்களைநடித்துக்காட்டியவர்களுக்குவிருதுகளும்வழங்கப்படுகிறது. எனவே நாட்டில் நடக்கின்ற அனைத்து வன்முறைகள் ஒழுக்கச் சீர்கேடுகள்,பாலியல் பலாத்காரங்கள் எல்லாவற்றிற்கும் காரணகர்த்தா
அரசாங்கம் தான். எனவே முதலில் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படவேண்டியதுஅரசாங்கம்தான்.ஒவ்வொருநாளும்எத்தனைபாலியல் குற்றம் நடக்கிறது. வருடத்திற்கு எத்தனை ஆயி ரம் நடக்கின்றன என்ற புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது. ஆனால் எவ்வித தடுப்பு
நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படு வதில்லை.எனவே ஒரு அரசு எவ்வாறு இயங்க வேண்டும்என்பதற்கான ஒழுங்குமுறையை மனிதனைப் படைத்தஇறைவன் நமக்கு வகுத்துத் தந்துள்ளான். அந்தநெறிமுறைகளைக் கடைபிடிப்பதால் மட்டுமே மனிதஇனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். படைத்தஇறைவனுடைய சட்டத்தைப் பின்பற்றி வாழாவிட்டால்மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையில் கடுமையானநரக வேதனையில் தள்ளப்படுவோம் என்ற அச்சம்மக்களின் இதயங்களில் பதிக்கப்படும்போது தான்
குற்றங்கள்வெகுவாகக்குறையும்.மனிதன்இயற்றுகின்றசட்டங்களுக்குமனிதன்பயப்படுவதைவிட,மனிதனைப்படைத்தஇறைவனின் சட்டம் எனும் போதுநிச்சயம் அதற்கு கொஞ்சமாவது தலை சாய்ப்பான்,மறுமை வாழ்க்கை என்று ஒன்று உண்டு, அங்கு நாம்செய்யும் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவோம். அதுநிரந்தரமானது, யாருடைய சிபாரிசின் மூலமும் காப்பாற்றப்படமாட்டோம் என்ற பயம் ஏற்படும் போது, அதுஅவனைப் பக்குவப்படுத்துகிறது. மனிதனாக மாற்றுகிறது. குற்றங்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே நாட்டை
அழிவிலிருந்தும், நாட்டு மக்களை வன்கொடுமைகளிலிருந்தும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி படைத்த இறைவனின்வழிகாட்டுதலை பின்பற்றுவதுதான் அந்த நேர்வழிஇறைவேதமான பரிசுத்த குர்ஆனில் மட்டுமே உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்:
”நிச்சயமாக இந்த குர்ஆன் மனிதர்களுக்குமிகவும் சரியான வழிகாட்டுதலை வழங்குகிறது.நற்செயல்கள் புரிவோருக்கு மிகப்பெரிய நற்கூலிஉண்டுஎன்றுவாழ்த்துக்கூறுகிறது.மேலும்மறுமையைநம்பாதவர்களுக்குநிச்சயமாககடுமையானவேதனையைதயார்ப்படுத்தியுள்ளோம்.
அல்குர்ஆன் 17:9,10

No comments:

Post a Comment