Sunday, September 2, 2012

அல்ஜன்னத் 2012)செப்டம்பர் தலையங்கம்




பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைமியான்மரில்ஆட்சியாளர்களின் துணையோடு கூட்டம் கூட்டமாககொன்று குவிக்கப்பட்டு வரும் காட்சிகள், உயிரோட்டமுள்ள ஒவ்வொரு மனிதனையும் பதற வைக்கின்றகாட்சிகளாக உள்ளன. மனிதஉணர்வுள்ள யாராலும்இப்படிப்பட்ட கொடூரசம்பவங்களைப்பார்த்துக்கொண்டுசும்மாஇருக்கமுடியாது.அந்தகாட்சிகளைப்பார்க்கின்றபோது, தனக்கு பறக்கின்ற இறக்கைகள்இருந்தால் ஆகாயத்தில் பறந்து சென்று போய்இந்தபடுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருப்பவர்களைக் கூண்டோடு அழித்துவிட்டுவரவேண்டும்என்றுதான்நியாயஉணர்வுள்ளஒவ்வொருவனும்ஆசைப்படுவான்.இந்த இனப்படுகொலையைஏதோ இரு வகுப்பினருக்கிடையேயான மோதல்கள் என்று சொல்சும்மாஇருக்க முடியாது. காரணம் மியான்மர் அரசும்பௌத்த சாமியார்களும், அரசின் எல்லாத் துறைகளும்இணைந்து முஸ்ம்களைக் குறி வைத்து அழித்துள்ளனர். இந்த கொடூர சம்பவங்களை நடத்திக்கொண்டிருப்பவர்களைத் தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லை.சர்வதேச மனித உரிமை சங்கங்கள் பெரிய அளவில்எந்தவித குரலும் கொடுக்கவில்லை. வல்லரசுகளைப்பொறுத்தவரை வளமான நாடுகளில் தேவையில்லாதவிஷயங்களுக்கெல்லாம் தங்களுடைய மூக்கைநுழைப்பார்கள். பின்னர் அந்த நாட்டு வளங்களைச்சூரையாடிச் செல்வார்கள். ஆனால் இது போன்ற பின்னடைந்த நாடுகளில் ஏற்படுகின்ற படுகொலைகளைப்பற்றி கண்டு கொள்வதே இல்லை. காரணம் இவர்கள்விஷயத்தில் தலையிடுவதால் அவர்களுக்கு எந்தவிதஉலகாதாயமும் கிடைக்கப்போவதில்லை.மியான்மர் மக்களில் பல இலட்சம் பேர் தாங்கள் பிறந்தமண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு, நாட்டை விட்டேவிரட்டப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. இவர்கள்யாருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் தாய்லாந்துஅரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதுபாராட்டப்படக்கூடிய விஷயம். எந்த நாடும் இந்தஇனப்படுகொலையைக் கண்டுகொள்ளாத நிலையில்குவைத் அரசும் சவூதி அரசும் இந்த செயல்களுக்குஎதிராக கண்டனக் குரல் எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டு அகதிகளாக ஆகிவிட்டவர்களுக்கு இயன்றஉதவிகளைச் செய்யவும் முன் வந்துள்ளது. முஸ்ம்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மியான்மர் அரசின்தலைவன் ஒட்டுமொத்த முஸ்ம்களையும் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று அழைப்புக்கொடுத்துதனது வெறித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளான்.அதுமட்டுல்லாமல் பர்மாவில் நூற்றுக்கணக்கானபள்ளிவாசல்களில் புனித ரமலானில் பள்ளிவாசல்களில்பாங்கு எழுப்புவதற்கும் தொழுகை நடத்துவதற்கும்தடைவிதித்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன.இது மிகப்பெரிய அக்கிரமும் அநீதியுமாகும். இதுகண்டனத்திற்குரிய விஷயம்.அஹிம்சை, சகிப்புத்தன்மை என்றெல்லாம் பேசிக்கொள்ளும் புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்டமனித நேயத்திற்கு அப்பாற்பட்ட கொடூர சம்பவத்தைநடத்தியிருப்பது வியப்பிற்குரியதாகும். மியான்மரில்நடக்கும் இந்த சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான சம்பவங்களாகப் பார்க்காமல் எந்தமக்களுக்கும் இதுபோன்ற நிலை எந்த பகுதியில்நடைபெற்றாலும் நியாய உணர்வுள்ளவர்கள் எதிராகக்குரல் கொடுக்கவேண்டும்.எதுவும் செய்ய முடியாத நிலையில்இருக்கின்ற நம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகஅல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கவேண்டும். உயிரிழந்த மக்களுக்குவல்ல அல்லாஹ் மறுமையில் சொர்க்கபார்க்கியத்தை வழங்கவும், உயிரோடு போராடிக்கொண்டிருக்கும்மக்களுக்கு வல்ல அல்லாஹ்பொறுமையைக் கொடுத்தருளவும்துஆ வேண்டுவோம்.

No comments:

Post a Comment