எழுதியவர்: அபூ நபீலா
முதஸிலாக்கள் என்பவர்கள் இஸ்லாத்தின் பெயரால் உருவான குதர்க்கவாதம் பேசும் ஒரு பிரிவினராகும். மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும் தங்களுடைய அறிவில் உரசிப்பார்த்து விதண்டாவாதம் பேசக்கூடியவர்களாக விளங்கினர். குறிப்பாக அல்லாஹ்வுடைய விஷயத்தில் அதிகமாக தர்க்கிக்கக் கூடியவர்களாக இருந்தனர். காரணம் இவர்கள் தர்க்கக்கலையை கற்றுத் தேறியவர்களாக விளங்கினர்.
இவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களுக்கு மாற்றுக் கருத்து கொடுத்தனர். குர்ஆனில் அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதாகவும், கைகள் இருப்ப
தாகவும், கண்கள் இருப்பதாகவும் பல வசனங்கள் வந்துள்ளன. அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்பதற்கு அடியிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களை காணலாம்.
''நிச்சயமாக எவர்கள் (நபியே!) உம்மிடம் உடன்படிக்கை செய்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்
விடமே உடன்படிக்கை செய்கின்றனர். அல்லாஹ்வுடைய கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது. அல்குர்ஆன் 48:10
''நிச்சயமாக அருட்கொடைகள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது. தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான். அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன். அல்குர்ஆன் 57:29
''அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்
தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ் வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு தன்அருட்
கொடைகளை வழங்குகிறான். அல்குர்ஆன் 5:64
மேலும் நாம் வானத்தை எவருடைய உதவியுமின்றி நம் கைகளாலேயே அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாக்கம் செய்யக்கூடியவரே. அல்குர்ஆன் 51:47
' 'அல்லாஹ்வை அவர்கள் மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை. இன்னும் இந்த பூமி முழுவதும் மறுமைநாளில் அவனுடைய ஒரு பிடிதான். மேலும் வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டிருக்கும் அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அவன் மிக்க தூய
வன் மிக்க உயர்ந்தவன். அல்குர்ஆன் 39:61
இந்த வசனங்களில் அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால்
கை என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுக்கும்போது அல்லாஹ்வுக்கு வடிவம் ஏற்பட்டுவிடும், எனவே கை என்று வந்துள்ள இடங்களில் மாற்றுப் பொருள்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி கை என்ற சொல்லிற்கு 'அல்லாஹ்வின் ஆற்றல்', 'அல்லாஹ்வின் வல்லமை' என்று பொருள் கொடுக்கின்றனர். எந்தவிதமான முகாந்தர
மும் இல்லாமல் குர்ஆனில் உள்ள வசனங்களுக்கு மனோ இச்சையின் அடிப்படையில் மாற்றுப் பொருள் கொடுக்கின்ற தவறான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது இந்த மூதஸீலா என்பவர்கள் தான். இவர்களுடைய தவறான இந்த அணுகுமுறைக்கு அவர்களுடைய காலத்தில் உள்ள ஸலபுஸ்ஸாலிஹீன்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
மூதஸீலாக்களின் வாதப் பிரகாரம் அல்லாஹ்விற்கு வடிவம் ஏற்பட்டுவிடுவதிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் இப்படி 'கை' என்ற சொல்லிற்கு ''ஆற்றல்'' என்ற பொருள் கொடுப்
பார்களானால் குர்ஆனில் 5:64 என்ற வசனத்தில் அல்லாஹ்வுடைய இருகைகள் என்று வந்துள்ளதே அதற்கு அல்லாஹ்வுடைய இரு ஆற்றல்கள் என்று இவர்கள் சொல்வார்களா? என்று கேட்கும் போது வாயடைத்து விடுகின்றனர்.
இதைப் போன்றுதான் அல்லாஹ்வுடைய பல பண்புகளுக்கு தங்கள் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கங்கள் கொடுத்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டால் எங்களுடைய அறிவுக்கு எது பொருந்துமோ அப்படிப்பட்ட பொருளைத்தான் குர்ஆன் வசனங்களுக்கு கொடுப்போம் என்று வாதம் புரிந்தனர். இந்த மூதஸீலாக்களின் அணுகுமுறையை கடை பிடிக்கின்றவர்கள் நவீன காலத்திலும் தோன்றியுள்ளனர். குர்ஆன் வசனங்களுக்கும், சரியான ஹதீஸ்களுக்கும் தங்கள் மனோ இச்சை பிரகாரம் பொருள் கொடுத்து வருகின்றனர். அதைப் பற்றிய விளக்கங்களை இன்ஷாஅல்லாஹ் அடுத்து தொடரில் பார்ப்போம்
No comments:
Post a Comment