எழுதியவர்: அபூ நபீலா
ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாமின் பெயரால் பல பிரிவுகள் சமுதாயத்தில் தலை தூக்கின, அனைத்து பிரிவுக்குப் பின்னால் இருந்து செயல்படக் கூடியவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பாக அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள் என்று குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற யூதர்கள், முஸ்லிம்களுக்கிடையில் பிரிவினைகளை உருவாக்கி விடுவதில் இவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே இஸ்லாமில் ஊடுருவி கலகம் விளைவித்தவர்கள், நபியுடைய காலத்தில் இவர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஆனால் நபியுடைய மரணத்திற்குப் பின்பு இவர்களுடைய கை ஒங்கியது. இஸ்லாமிய சமூகத்தை பிளவு படுத்துவதில் வெற்றியும் கண்டார்கள். சமூகத்தை பிளவு படுத்துவதற்கு இவர்கள் மூலக்கருவியாகப் பயன்படுத்தியது
இஸ்லாமிய இறைக் கோட்பாடு. கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால் மற்ற விஷயங்களில் எளிதாக நுழைந்து விடலாம் என்பது இவர்களின் திட்டமாகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்று தான் ''முஅதஸிலா'', என்று சொல்லப்படுகின்ற பிரிவு,
இது ஹிஜ்ரி 80லிம் ஆண்டுகளில் ஈராக்கில் உள்ள ''பஸரா'' என்ற நகரில் தோன்றியது. உமய்யாக்கள் ஆட்சியின் கடைசி காலத்தில் உருவான இந்த பிரிவு அப்பாஸிய்யா ஆட்சி
காலத்தில் பிரபலமானது. இந்தப்பிரிவைச் சார்ந்தவர்கள் இஸ்லாமியக் கொள்கையைத் தங்களுடைய அறிவில் உரசிப்பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வார்கள். குர்ஆன் சுன்னாவின் ஆதாரத்தைவிட அறிவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுய அறிவும் பிரித்து அறிகின்ற தகுதியும் இருந்தால் அதுவே ஹலால், ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது) என்று தீர்மானிப்பதற்கு போதுமானதாகும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்கள் அறிவோடு ஒத்துப்பார்ப்பார்கள். அறிவு சரி என்பதை ஏற்பார்கள், அறிவு தவறு என்று சொல்வதைப் புறக்கணிப்பார்கள். இந்த சிந்தனையுடையவர்கள் முதல் முதலில் ஈராக் நாட்டின் பஸரா என்ற நகரில் தான் தோன்றினர்.
பின்னர் அவர்களுடைய சிந்தனை
அண்டை நாடுகளான எமன், சவூதிஅரேபியா, கூஃபா, அர்மீனியா போன்ற பகுதிகளிலும் பரவியது. ''முஅதஸிலா'' என்ற இந்த பிரிவு தோன்றுவதற்கு இரண்டுவிதமான காரணங்கள் உள்ளன. ஒன்று மார்க்க அடிப்படையிலான காரணம், இன்னொன்று அரசியல் காரணம், தர்க்கக் கலையில் பிரசித்திப் பெற்ற இவர்களின் அறிஞர்களுக்கிடையில் அடிக்கடி விவாதங்கள் நடை
பெறுவதுண்டு. மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகமாக தர்க்கித்துக் கொள்வார்கள். இந்த பிரிவில் உள்ள அறிஞர்களில் முக்கிய மானவர்களான ''வாஸில் பின்அதா'' அவருடைய ஆசிரியரான ''ஹஸனுல் பஸரி' ஆகிய இருவருக்கிடையில் அடிக்கடி விவாதங்கள் நடைபெறுவதுண்டு. ஒரு முறை பெரும்பாவத்தில் ஈடுபடுபவன் விஷயத்தில் விவாதம் நடைபெற்றது, முடிவில் ''பெரும் பாவத்தைச் செய்தவன் காஃபி ராகிவிட்டான்'' என்று சொல்லக் கூடாது என்று தீர்ப்பு வழங்க்கப்பட்டது. ஆனால் வாசில் பின் அதா என்பவர் இந்தத் தீர்ப்பை ஏற்காமல் பெரும்பாவம் செய்தவனை காஃபிர் என்றோ மூமின் என்றோ சொல்லக் கூடாது, இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறான் என்று கூறினார். இவ்வாறு சொன்ன காரணத்தினால், ''வாசில் பின் அதா தனது ஆசிரியரான ஹஸனுல் பஸரி என்பவரின்
அவையிலிருது பிரிந்து தனியாக ஒரு குழுவை ஏற்படுத்தினார். அதன் மூலம் தன்னுடைய அறிவுக்கு ஏற்ற விஷயங்களை மார்க்கத்தில் புகுத்தலானார். அப்போது தான் ஹஸனுல் பஸரி ''நம்மிடமிருந்து வாசில் விலகி விட்டார்'' என்று கூறினார். அன்று முதல் விலகியவர்கள் என்ற கருத்தைக் கொண்ட 'முஅதஸிலா' என்ற பெயரால் பிரபலமானார்கள். இந்த பிரிவு உருவாவதற்கான அரசியல் காரணம் என்னவென்றால், இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தை விட்டும் நாலாபாகங்களுக்கும் பரவ ஆரம்பித்த போது பல மதங்களிலும் பல கொள்கைகளிலும்
இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்று வரலானார்கள். அப்போது அவர்களுடைய கலாச்சாரமும் சிந்தனைகளும் கூடவே சமுதாயத்தில் நுழைய ஆரம்பித்தன. தன்னுடைய அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மார்க்கக் கொள்கை விஷயம் எதுவாக இருந்தாலும் அறிவில் உரசி சிந்தித்து, அறிவிற்கு ஏற்றதை மட்டுமே ஏற்கவேண்டும் என்ற கிரேக்க சிந்தனை வலுவாக தலை தூக்க ஆரம்பித்வர்கள் தான் முஅதஸிலாக்கள். இவர்களுடைய கொள்கை என்ன? தற்காலத்தில் அந்த கொள்கை மக்களிடையில் எவ்வாறு ஊடுருவி உள்ளது, என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்து தொடரில் பார்ப்போம்.
No comments:
Post a Comment