கோடைகால இஸ்லாமியப்பயிற்சி முகாம்..
ஏக இறைவனின் திருப்பெயரால்.. இடம்: மஸ்ஜிதுஸ்ஸலாமத், ஹவ்வாநகர்,இளங்கடை,நாகர்கோவில்,குமரிமாவட்டம். நாள்:20-04-2012 முதல் 20-05-2012 வரை (ஒருமாதகாலம்) இன்ஷாஅல்லாஹ்.. வகுப்பு நடைபெறும் நேரம்:தினமும் மாலை 2 மணிமுதல் மஃரிப் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் கோடைவிடுமுறையில் இஸ்லாமிய கல்வி வழங்க வழக்கம்போல் இவ்வாண்டும் நமது ஃபிர்தவ்ஸியா நகர் தவ்ஹீது மர்க்கஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இறையச்சம் மற்றும் ஒழுக்கப்பயிற்சியுடன் கூடிய இஸ்லாமியக் கல்வியை புகட்டுவதன்மூலம் நல்லொழுக்கமுள்ள சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயனடையயுமாறு கேட்டுக்கொள்கிறோம். முறையான பாடதிட்டத்துடன் தேற்சி பெற்ற மார்க்க அறிஞர்களைக் கொண்டு ஒருமாதகாலம் இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில் சேரவிருப்பமுள்ளவர்கள் 18-04-2012 க்குள் விண்ணப்பிக்குமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்: திருக்குர்ஆன் ஓதுதல் பயிற்சி மற்றும் மனனப்பயயிற்சி குர்ஆன் ஹதீஸ் விளக்கவுரை நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறநபித்தோழர்கள் வரலாறு இஸ்லாமிய அடிப்படை கொள்கை அன்றறாட துஆக்கள் ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் ஒழுக்கம் மற்றம் தொழுகைப்பயிற்சி குறிப்பு: தவ்ஹீத் மர்க்கஸில் இடநெருக்கடி காரணமாக இந்த ஆண்டுமுதல் இந்த வகுப்புகள் ஹவ்வாநகர் மஸ்ஜிதுஸ்ஸலாமத் பள்ளிவாசலில் வைத்து தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். இப்படிக்கு தவ்ஹீத் மர்க்கஸ் ஃபிர்தவ்ஸியாநகர் நிர்வாகம் தொடர்புக்கு 9442076269

No comments:
Post a Comment