பிஸ்மில்லாஹிற்ரஹ்மானிர்றஹீம்
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி...
JAQH மாநில மாநாட்டுச் செய்திகள்
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக 2012 - ஜனவரி 14,15 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கோவை மாநகரில் ''படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மிகவும் எதிர்பார்ப்புடன் ஒருநாளைக்கு முன்பாகவே வெளி ஊர்களிலிருந்து சகோதர சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
முதல்நாள் காலை 10:00 மணியளவில் மாநில துணைத் தலைவரும் மாநாட்டுக்குழு தலைவருமான சகோதர் கோவை எஸ்.அய்யூப் அவர்களின் வரவேற்புரையுடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை ஒட்டி சென்னை தலைமயகத்தில் 2011 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றிபெற்ற ஜூனியர் பிரிவு வெற்றியாளர்களான சகோதரர்கள் 1) காகா நாஜிர் அஹ்ஸன் 2) கவுஸ்பாஷா 3) முஹம்மது அஸாருதீன் ஆகியோர்களின் கிராஅத்துடன் மாநாடு துவங்கியது.
ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் தலைமை உரை நிகழ்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவை மாணவரணி பொறுப்பாளர் சகோதரர் ஷஃபி அவர்கள் தனக்கே உரிய பாணியில் ''படைத்தவனை அறிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை இளைஞரான இவர் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிலருந்து கம்பீரமாக உரையாற்றியது வந்திருந்த இளைஞர்களை சிந்திக்கவைத்தது. மௌலவி உமர் அலி ஃபிர்தவ்ஸி அவர்கள் ''படைப்புகளின் நோக்கம்', என்ற தலைப்பிலும் மௌலவி முஹம்மது இக்பால் ஃபிர்தவ்ஸி அவர்கள் ''படைத்த இறைவனை உறுதிபட நம்புங்கள்' என்ற தலைப்பிலும் JAQH அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சகோதரர் சு.முஹம்மது உஸ்மான்கான் சாஹிப் அவர்கள் ஆங்கிலத்தில் சிற்றுரையாற்றினார்கள். அகில இந்திய அஹ்லேஹதீஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் மௌலவி அஸ்கர் அலி மஹதி அவர்கள் உருதுவில் சிறப்புரையாற்றினார்கள். அவரது உரையை அப்துல்காதிர் மதனி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அத்துடன் முதல் அமர்வு நிறைவுற்றது.
இரண்டாவது அமர்வு மாலை 4:00 மணி அளவில் மாநிலச்செயலாளர் மௌலவி நஜீபுல் ஹுதா ஃபிர்தவ்ஸி அவர்களின் தலைமையில் துவங்கி அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா கல்லூரி பேராசிரியர் மௌலவி முஹம்மது ரஃபீக் 'படைத்தவனை நெருங்க' என்ற தலைப்பிலும், JAQH மாநில அழைப்பாளர் முஹம்மது யூசுஃப் மிஸ்பாஹி ''படைப்புகளை வழிபட துவங்கிய மக்கள்' என்ற தலைப்பில் முன் சமுதாய மக்கள் அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து எவ்வாறு திசைதிருப்பப்பட்டார்கள் என்பதை இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்தார். மௌலவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ''படைத்தவனின் சாபம்' என்னும் உரை அனைவரின் கண்களையும் குளமாக்கியது இரண்டாம் அமர்வு முடிவுற்றது.
மூன்றாவது அமர்வு இரவு 7:00 மணி அளவில் மாநிலச்செயலாளர் சகோதரர் ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையில் மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி 'படைத்தவனின் விசாரணை' என்ற உரை சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் ஒருவனே தேவன்! ஒன்றே குலம்! என்ற தலைப்பில் உரையாற்றியது வந்திருந்த மாற்று சமுதாய மக்களையும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர்களையும் அசத்தியத்திலிருந்து சத்தியத்துக்கு சிந்திக்க வைத்தது. அதைதொடர்ந்து ஜம்யியாவின் மூத்த தலைவர் மௌலவி S. கமாலுத்தீன் மதனி 'படைத்தவனை மறந்தால்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இரண்டாவது நாள் ஞாயிறு 15-01-2012 ஜம்யியாவின் மூத்த தலைவர் மௌலவி கமாலுத்தீன் மதனி அவர்களின் தலைமையில் மாநாடு ஆரம்பித்தது. மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றிபெற்ற சீனியர் பிரிவை சார்ந்த 1)ஹாபிழ்.முஹம்மது அன்வாருல் ஹக் 2)ஹாபிழ்.அபுபக்கர் அமினுர் ரஹ்மான் 3)ஹாபிழ்.முஹம்மது தாரிக் ஆகியோர்கள் கிராஅத் ஓதினார்கள். கிராஅத் போட்டியில் வெற்றி பெற்ற சீனிரியர் மற்றும் ஜுனியர் பிரிவைச் சாரந்த ஆறு வெற்றியாளர்களுக்கும் பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன. மிக அழகான முறையில் திருக்குர்ஆனை ஓதிய ஆறு காரிகளின் கிராஅத் அனைவரின் உள்ளங்களையும் வெகுவாக ஊடுருவி எங்கள் பிள்ளைகளுக்கும் இதுபோல் திருக்குர்ஆனை ஓத கற்றுக்கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது மக்களின் ஆர்வத்தை பறைசாற்றியது. தொடர்ந்து மௌலவி ஆஷிக் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'படைத்தவனை நேசிக்க' என்ற தலைப்பிலும் மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பஈ அவர்கள் 'படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?'என்ற தலைப்பிலும் மௌலவி அய்யூப் அலி பைஜி அவர்கள் 'படைத்தவன் யார்? என்ற தலைப்பிலும் மௌலவி ஹாமீம் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'படைத்தவனின் மன்னிப்பு' என்ற தலைப்பிலும் மௌலவி ரஹ்மத்தல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'படைத்தவனின் தண்டனை' என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இரண்டாம் அமர்வு மாலை 4.00 மணியளவில் மாநில துணைத்தலைவரும் அல்ஹுதா நிறுவங்களின் தாளாளருமான பேராசிரியர் T.C. அப்துல் மஜீத் தலைமையில் துவங்கியது மௌலவி உஸ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'படைத்தவனின் கருணை' என்ற தலைப்பிலும் மௌலவி அப்துல் காதிர் உமரி அவர்கள் 'படைத்தவன் ஒன்றா? இரண்டா?' என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். கேரளா நத்வதுல் முஜாஹிதீன் அமைப்பை சார்ந்த மௌலவி ஹுஸைன் ஸலஃபி அவர்கள் 'படைத்தவனை மட்டுமே வணங்குங்கள்' என்ற தலைப்பில் மலையாள மொழியில் உரை நிகழ்த்தினார்கள். இத்துடன் இரண்டாம் அமர்வு நிறைவுற்றது.
மஃரிப் தொழுகைக் குப்பிறகு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இமாம் ஹுஸைன் தலைமையேற்று மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்கள்.; 'படைத்தவனை நோக்கி' என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய கோவை S.அய்யூப் அவர்களின் உரை அனைத்து இயக்கங்களுக்கும் கழகங்களுக்கும் அல்லாஹ்வுக்கு இந்தபூமியில் நடக்கும் அநீதியான இணைவைப்பை முடிவுக்கு கொண்டுவர இணைந்து போராட முன்வாருங்கள் என்னும் உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.
இறுதியாக மாநில தலைவர் அஷ்ஷேக் மௌலவி S.I.அப்துல் காதிர் மதனி அவர்கள் இந்த மாநாடு எந்த இலட்சியத்துக்காக கூட்டப்பட்டதோ அதை செயல்படுத்திக்காட்ட எல்லா தரப்பினரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் வைத்தார்கள். சகோதரர் ஹனீஃபா அவர்கள் நன்றி உரையுடன் இனிதே மாநாடு நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!!!!!
மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட பிற சமுதாய சகோதர்களுக்கான பிரத்தியேக தாஃவா மையத்தில் பிற சமுதாய மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் தமிழ் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் 68 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
மாநில மாநாட்டு வளாகத்தில் அமைந்த தாஃவா அரங்கில் வந்து பயன்பெற்ற சகோதர சகோதரிகளின் என்னிக்கை 400 ஆகும்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பெண்கள் 18 ஆண்கள் 50.
முதல் நாள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் 29 நபர்கள்.
இரண்டாம் நாள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் 39
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
மாநாட்டில் தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடும்பத்தோடு பேருந்துகளிலும் இரயில்களிலும் முன்பதிவு செய்து வருகைதந்திருந்தனர். வருகை தந்த இரு பாலருக்கும் தனிதனியாக இரண்டுநாள் தங்குவதற்கும் உணவிற்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஒளு, தொழுகை, குடிநீர் கழிப்பறை ஆகிய வசதி சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
JAQH மாநில துணைப்பொதுச்செயலாளரும் JAQH மனிதநேயக்குழுவின் மாநில தலைவருமான சகோதரர் முஹம்மது மலங்கு அவர்களின் தலைமையில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு மாநாட்டு திடலில் அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தது. இங்கு இரத்ததானம் இரத்த குருப் அறிந்து கொள்ளும் வசதி செய்திருந்தது. மாநில தலைமை மக்களுக்கு பயனுள்ள நூல்களையும் பிரசுரங்களையும் இலவசமாக கொடுத்து உதவினர்.
JAQH நிறுவனங்களான அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி நாகர்கோவில், குல்லியத்துல் பனாதுல் முஸ்லிமீன் பேரணாம்பட், இஸ்லாஹியா அரபிக் கல்லூரி திருச்சி, ரியாளுஸ் ஸாலிஹீன் கோயம்புத்தூர், அல்ஹுதா ஆர்ஃபனேஜ் திருச்சி, அல்ஹுதா நிறுவனங்கள், தாருர்ரஹ்மத் அநாதை இல்லம் இணையம், இஸ்லாமிய கல்வி வெளியீட்டு நிறுவனம் சென்னை, அல்ஜன்னத் மாதஇதழ் சென்னை ஆகிய அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாநாட்டுத் தலைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வைப் பற்றியதாகவே இருந்ததால் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டிய முறை பற்றி தெளிவான அறிவு பெற்றவர்களாக மக்கள் மாநாடு முடிந்து சென்றனர். மார்க்கப் பிரச்சாரப் பணியில் ஒத்துழைக்கக வேண்டுமென்ற நல்லெண்ணமும் ஒற்றுமை உணர்வும் சகோதர இயக்கத்தினரிடையே இருக்கின்றது என்பதற்கு தெளிவான அடையாளமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. ஆல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்
No comments:
Post a Comment