Friday, September 6, 2013
முஸ்லிம்களாக வாழ்வோம் (Arabic bayan)
Monday, September 2, 2013
அன்புள்ள கொள்கைச்சகோதர்களுக்கு
மனம்திறந்தமடல்
அல்ஜன்னத் செப்டம்பர் 2013
வல்லஅல்லாஹ்நம்எல்லோருக்கும்உறுதியானஈமானையும்சத்தியபாதையில் மனஅமைதியையும் தந்தருள்வானாக!ஏகத்துவக் கொள்கை என்னும் ஓர் இறை நம்பிக்கையை ஏற்றிருக்கின்ற நாம் அந்த கொள்கையில்இறுதி மூச்சுவரை இருந்து செயல்படுவதற்குரிய பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கவேண்டும் என அல்லாஹ்விடத்தில் சதா கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடையநம்பிக்கையில் பலவீனத்தை ஏற்படுத்துவதற்குண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் நாம் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். நாம் ஏற்றிருக்கின்றஇஸ்லாமின் தூய கொள்கையை சரிவர பற்றிப் பிடித்து செயல்பட வேண்டுமானால் அதற்கு போதியமார்க்க அறிவு அவசியமாகும். எல்லாவற்றையும் எல்லோராலும் தெரிந்துகொள்ள முடியாதுஎன்றாலும் நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கின்ற மார்க்கத்தோடு தொடர்புடைய செயல்களுக்குரிய அறிவைக் கற்றாக வேண்டும். குர்ஆனும், நபிவழியும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள்,அதன்படித்தான் நாங்கள் செயல்படுவோம் என வாய் கிழிய பேசிவிடுவதால் மட்டும் நாம் தூயஇஸ்லாமை பின்பற்றியவர்களாக ஆகமுடியாது. இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை அன்றாடநமது வாழ்க்கையில் செயல்படுத்திக்காட்ட வேண்டும்.
அப்படி செயல்பட வேண்டுமானால் அதுபற்றியசெயல் முறைகள் என்ன என்பதை குர்ஆன் சுன்னா ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது தான் அந்த செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.ஆனால் இந்த விஷயத்தில் நிறைய சகோதர சகோதரிகள் பின் தங்கியுள்ளனர். கொள்கைவிஷயங்களிலும் வணக்க வழிபாடுகள் விஷயங்களிலும் ஏனோதானோ என்று நடந்துகொள்ளுகின்றனர். இறை நம்பிக்கையின் அடிப்படையான விஷயங்களைக் கூட நம்மில் பலர்அறியாமலிருக்கின்றனர். அல்லாஹ்வின் ஆற்றல் அவனுடைய வல்லமை, அவனுடைய பண்புகள்அவனுடைய நாமங்கள் போன்ற அவசியம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய இந்த அறிவைப்பெறாமல் நாம் எந்த வணக்க வழிபாடுகளைச் செய்தாலும் அவை பயனற்றதாகி விடும். அன்றாடதொழுகைகளில் ஓதத்தேவையான அத்தியாயங்களையும் மனனம் செய்ய வேண்டும். குர்ஆன்ஹதீஸிற்கு சொந்தக்காரர்கள் என்று கூறி உரிமை பாராட்டக்கூடியவர்கள் உறுப்பினர்களாகஇருந்தாலும், பொறுப்பு வகிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் வணக்க வழிபாடுகளுக்குத்தேவையான ஆதாரங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் தன்னைகுர்ஆன் ஹதீஸ் ஜமாஅத்தில் அங்கம் என்று கூறுவதில் அர்த்தமில்லை.
இப்படிக்கு உங்கள் நலம் நாடும்
கமாலுத்தீன்மதனி
அனியாயக்கார்கள் அழிக்கப்படுவார்கள்
அல்ஜன்னத் செப்டம்பர் 2013 தலையங்கம்
''நீங்கள் இந்த மார்க்கத்தை புறக்கணித்துச் சென்று விடுவீர்களானால் உங்களுக்கு பகரமாக வேறுசமூகத்தைக் கொண்டு வருவான்.அவர்கள் உங்களைப் போன்றுஇருக்க மாட்டார்கள்''அல்குர்ஆன் 47:38
மற்றவர்கள் கையிலே ஆட்சியைக்கொடுத்து,
அவர்களைஇந்தசமுதாயத்தின் மீதுசாட்டிவிட்டான்.இப்போதுஇந்தசமுதாயம்செய்வதறியாதுஅல்லாஹ்வை அழைத்துகூப்பாடு போடுகிறது.கடந்த காலங்களில் நடந்துவிட்ட தவறுகளுக்காக அல்லாஹ்விடத்தில் வருந்துவோம், அவனுடைய அருளை வேண்டிக் கொண்டேஇருப்போம்.
நம்முடைய உளத்தூய்மையைப் பொறுத்து வல்ல அல்லாஹ்எவ்வளவு பெரிய தீய சக்திகளையும்முறியடிக்க ஆற்றல் உள்ளவனாகஇருக்கின்றான்.
நாம் கொண்டிருக்கின்ற உயர்ந்தகொள்கையை உலகெங்கும் முறையாக எடுத்துச் சொல்ல தவறிவிட்டோம், இதன் காரணத்தினாலும்,மற்ற மனிதர்களை மூடநம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றும் முயற்சியைநமது முன்னோர்கள் சரிவரசெய்யாததினாலும் அதனுடையவிளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.வல்ல அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு நாட்டை ஆளுகின்ற ஆட்சிப்பொறுப்பை எண்ணூறு ஆண்டுகாலம் கொடுத்து சோதித்தான், அதைஅவர்கள் சரியாகப் பயன்படுத்தி,அல்லாஹ்வுடைய மார்க்கத்தைமக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்ற அடிப்படையான பணியைசெய்யத் தவறிவிட்ட காரணத்தினாலும் ஆட்சியை தங்கள் சுகபோகவாழ்க்கைக்காக பயன்படுத்தியதாலும் ஓர் இறைக் கொள்கையைவளர்ப்பதற்கு பதிலாக, பல தெய்வவழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு கஸானாவிலிருந்து மானியங்கள் வழங்கிய காரணத்தினா லும்அல்லாஹ்வின் கோபப்பார்வைஅவர்கள் மீது விழுந்து, அவர்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கினான்.
''நீங்கள் மனம் தளர்ந்துவிடாதீர்கள்,
நீங்கள் எதற்கும் கவலையும்படாதீர்கள், நீங்கள் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்கள் தான்(மிகைக்கக் கூடிய) மேன்மைமிக்கவர்கள்.அல்குர்ஆன் 3:139
அக்கிரமக்காரர்களுடைய முடிவுநிச்சயம் மிகவும் மோசமானதாகஅமையும் என்பதைமட்டும்உறுதியாகநம்புவோம்.அக்கிரமக்காரர்களைஅவர்களுடைய அக்கிரமத்திலிருந்து காப்பாற்றி நேரியவழியில் செலுத்துகின்ற பணியைத்தான் நாம் செய்ய வேண்டும். நம்மைப்பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரங்களுக்கெல்லாம் சொந்தக் காரனாகியவல்ல அல்லாஹ் தான் ஆட்சியைக்கொடுக்கின்றான். அவன் தான்ஆட்சியைப் பிடுங்குகிறான் என்றநம்பிக்கையில் இருக்கின்றோம். நாம்ஒரு கட்டுக்கோப்பான சமுதாயமாக,ஒன்றுபட்டு, ஓர் இறைக்கொள்கையில் உறுதியாக இருப்போமானால்,எந்த தீய சக்திகளைக் கண்டும்அஞ்ச வேண்டியதில்லை. ஈமான்என்னும் இறை நம்பிக்கை நம்மிடத்தில் வலுவாக இருக்கும், காலமெல்லாம் நம்மை கண்டு எதிரிகள்அஞ்சுவார்கள்,
நம்முடைய உதவியைநாடி நம்மிடத்தில் பணிந்து வருவார்கள்.
தற்போது சில கொடுங்கோலர்கள் ஆட்சியைத் தன்கைவசம் வைத்துக் கொண்டு அப்பாவி மக்களையும்,சிறுபான்மை இனத்தவரையும் குறிவைத்துக் கொன்றுகுவிக்கின்றனர். இவர்களில் குஜராத் மாநிலத்தில் நீண்டகாலமாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நரேந்திரமோடி சில ஆண்டுகளுக்கு முன்தனது மாநிலத்திலுள்ள சிறுபான்மைசமுதாயத்து மக்கள் மீது இனப்படுகொலை நடத்தி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் களை கொன்று குவித்து, அவர்களதுஉடமைகளுக்கு நாசம் விளைவித்தசம்பவங்கள் நமது கண்களைவிட்டும் இன்னும் மறையவில்லை.அவரது கொலை வெறி தாக்குதன்காரணத்தினால் அமெரிக்காபோன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்துள்ளன. அவருக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என இந்திய நாடாளுமன்றஉறுப்பினர்கள் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுஅனுப்பியுள்ளனர். இந்த அளவிற்குசர்வதேச மக்களின் வெறுப்பைப்பெற்றுள்ள மோடியை தனது கட்சியின் பிரதம வேட்பாளராக பிஜேபிஅறிவித்துள்ளது என்ற செய்தியைபத்திரிகைகளும் செய்தி தொடர்புசாதனங்களும் பரபரப்பாக அன்றாடம் பேசியும் எழுதியும் வருகின்றன. பெரும் பர பரப்பை மக்களிடையே ஏற்படுத்தி, வாக்குகளைத்தன் பக்கம் திருப்பி ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்து விட வேண்டும்என துடியாய் துடிக்கின்றனர்.இதையெல்லாம் பார்த்து நாம்கலங்க வேண்டிய அவசியமில்லை,
இதற்கு சான்றாக ஈராக்கை கால் நூற்றாண்டுகளுக்குமேலாக ஆட்சி செய்த சத்தாம் ஹுஸைன், லிபியாவைமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக அடக்குமுறையில்கொடுங்கோல் ஆட்சி புரிந்த முஅம்மர் கடாபி, இவர்களுக்கு முன்னர் எகிப்தில் அடக்குமுறை ஆட்சி செய்துஅறிஞர்களை கொன்று குவித்த அப்துந் நாஸர் ஆகியோருடைய அழிவு மிகவும் மோசமான முறையில் அமைந்தது என்பதை உலகமக்கள் யாவரும் கண்கூடாகப்பார்த்த நிகழ்வுகளாகும். அவர்கள் எதையும் கொண்டுசெல்லவில்லை எதையும் சாதிக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் சாபத்தைத்தான் சுமந்துசென்றார்கள். தற்போது ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்துஅக்கிரமத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து பாடம் படிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
இவையெல்லாம் கடந்த கால சமூகத்தினருக்குஏற்பட்ட அழிவுகள் பற்றிய வரலாற்று உண்மைகளாகும். நாம் வாழும் இந்த காலத்திலும் பல அக்கிரமக்கார ஆட்சியாளர்கள் அநியாயமான முறையில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் விளைவித்துகொடுங்கோல் ஆட்சி நடத்தியதினால் அவர்களுடையமுடிவு மிகவும் மோசமான முறையில் அமைந்தது.
(அந்நேரம் நீர் அங்கு இருந்தால்) அக்கூட்டத்தாரைஅடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று, பிணங்களாகக் கிடப்பதைநீர் கண்டிருப்பீர், ஆகவே அவர்களில் எஞ்சி இருப்போரை உம்மால் காணமுடிகிறதா? மேலும்ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலைகீழாக புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (அல்லாஹ்வுக்கு இணைவைத்து) அக்கிரமத்தில்ஈடுபட்டு வந்தனர். ஆகவே அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆகையால்அவன் அவர்களை மிக்க கடுமையாகபிடித்துக்கொண்டான்.
அல்குர்ஆன் 69:2-10
''தமூது கூட்டத்தினரும் ஆது கூட்டத்தினரும்இதயங்களை நடுங்கச் செய்யும் மறுமை நாளைபொய்யாக்கினர்.
ஆகவே ஸமூது கூட்டத்தார் ஒருபெரிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள்.ஆதுக்கூட்டத்தார் பெரும் சப்தத்தோடு கடும்குளிர்காற்றைக் கொண்டும் அழிக்கப்பட்டார்கள்.ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ச்சியாகஅவர்கள் மீது அவன் வசப்படுத்தி வீசச் செய்தான்.
கடந்த கால சமுதாயங்களின் வரலாறுகளைப்படித்துப்பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களையும்,பலவீனமான சமுதாயத்தையும் கொடுமைப் படுத்தியஅக்கிரமக்கார ஆட்சியாளர்களையும்,
அதிகாரவர்க்கங்களையும் வல்ல இறைவன் அல்லாஹ் அழித்து ஒழித்துஇருந்த இடம் தெரியாமல் ஆக்கிய சம்பவங்களைநம்மால் அறிய முடிகிறது. கொடுங்கோல் ஆட்சி செய்தஃபிர்அவ்ன்,
காரூன், ஹாமான் போன்ற அநியாயக்காரர்கள் செய்த அட்டூழியங்களின் காரணத்தினால்அவர்கள் அழிக்கப்பட்டார்கள்,
அவர்களின் இறுதிமுடிவு மிகவும் மோசமானதாகவே அமைந்தது. இதைப்போன்று தான் ஆது,
சமூது கூட்டதார்களும் கூண்டோடு அழிக்கப்பட்டார்கள். இந்த உண்மைகளையெல்லாம் பரிசுத்த குர்ஆனில் வல்ல அல்லாஹ்சொல்லிக் காண்பிக்கின்றான்.
Subscribe to:
Posts (Atom)

